தென் ஆப்பிரிக்கா vs இந்தியா, மூன்றாவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதலிரண்டு டி20 போட்டிகளின் முடிவில் இரு அணிகாளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து, இந்த டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் சமன்செய்துள்ளன.
இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா - இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டியானது நாளை (நவம்பர் 13) செஞ்சூரியனில் உள்ள சூப்பர் ஸ்போர்ட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடரில் இரு அணிகளும் வெற்றிபெற்று தொடரில் முன்னிலை வகிப்பதன் காரணமாக, இப்போட்டியில் வெற்றிபெறும் அணி தொடரில் முன்னிலைப் பெறும் வாய்ப்பை பெறுவதுடன், தொடரை வெல்லும் வாய்ப்பையும் பெறும்.
மேற்கொண்டு இரு அணியில் உள்ள பேட்டர்கள், பந்துவீச்சாளர்கள் சிறப்பான ஃபார்ம்மில் இருப்பதன் காரணமாக இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் பேட்டர்களுக்கு சாதகமான செஞ்சூரியன் மைதானத்தில் இப்போட்டி நடைபெறவுள்ளதால் இரு அணியிலும் சில மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
இந்திய அணி
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி முதல் போட்டியில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்திய நிலையில், இரண்டாவது போட்டியில் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட முடியாமல் தாடுமாறியது. இருப்பினும் அணியில் தேவைக்கேற்ப பேட்டர்கள் இருப்பதால் அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பாதைக்கும் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான மைதானத்தில் இப்போட்டி நடைபெறவுள்ளதால், இந்திய அணி இப்போட்டியில் கூடுதல் வேகப்பந்து வீச்சாளரை பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா உத்தேச லெவன் : சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா/ரமந்தீப் சிங், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ரின்கு சிங், அக்ஸர் படேல், ரவி பிஷ்னோய்/வைஷாக் விஜயகுமார், வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான்.
தென் ஆப்பிரிக்க அணி
ஐடன் மார்க்ரம் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி முதால் போட்டியில் தோல்வியைத் தழுவினாலுன், இரண்டாவது போட்டியில் சிறப்பாக செயல்பட்டு அணி வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் சமன்செய்து அசத்தியுள்ளது. இருப்பினும் அந்த அணியின் நட்சத்திர பேட்டர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறிவருது அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது. அதேசமயம் அந்த அணியின் பந்துவீச்சை பொறுத்தவரையில் அனைவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளதால், இந்த போட்டியில் அந்த அணியில் பெரிதளவில் மாற்றங்களை செய்யாது என எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read: Funding To Save Test Cricket
தென் ஆப்பிரிக்கா உத்தேச லெவன்: ரியான் ரிக்கல்டன், ஐடன் மார்க்ரம் (கேப்டன்), ரீஸா ஹென்றிக்ஸ், ஹென்ரிச் கிளாசென், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டேவிட் மில்லர், கேசவ் மகாராஜ், மார்கோ ஜான்சன், ஜெரால்ட் கோட்ஸி, ஒட்னீல் பார்ட்மேன், பேட்ரிக் க்ரூகர்.