தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வரும் பாகிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வந்தது. இதில் நடந்து முடிந்திருந்த முதலிரண்டு ஒருநாள் போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று ஜோஹன்னஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்ததது. 

Advertisement

இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் அப்துல்லா ஷஃபிக் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். அதன்பின் சைம் அயூப்புடன் இணைந்த பாபர் ஆசாம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இப்போட்டியில் இருவரும் தங்கள் அரைசதங்களை கடந்ததுடன், இரண்டாவது விக்கெட்டிற்கு 114 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். இதில் 52 ரன்களை எடுத்திருந்த நிலையில் பாபர் ஆசாம் தனது விக்கெட்டை இழக்க, மறுமுனையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சைம் அயூப் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 3ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

Advertisement

அதன்பின் 13 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 101 ரன்கள் எடுத்த கையோடு சைம் அயூப் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய காம்ரன் குலாமும் முதல் பந்திலேயே விக்கெட்டை இழதார். மறுபக்கம் அரைசதம் கடந்த கேப்டன் முகமது ரிஸ்வானும் 53 ரன்களில் ஆட்டமிழந்தார். பின் சல்மான் ஆகா அதிரடியாக விளையாடி 48 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர். இதனால் பாகிஸ்தான் அணி 47 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 308 ரன்களைச் சேர்த்தது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் காகிசோ ரபாடா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதையடுத்து இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு கேப்டன் டெம்பா பவுமா - டோனி டி ஸோர்ஸி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பவுமா 8 ரன்னில் நடையைக் கட்ட, 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 26 ரன்களை எடுத்த கையோடு டோனி டி ஸோர்ஸியும் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய ஐடன் மார்க்ரமும் 19 ரன்களில் நடையைக் கட்டினார். பின்னர் ஜோடி சேர்ந்த ரஸ்ஸி வேன்டர் டூசென் - ஹென்ரிச் கிளாசென் இணை ஓரளவு தாக்கு பிடித்து அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தனர். இதில் வேன்டர் டுசென் 35 ரன்களில் ஆட்டமிழந்தார். 

அதேசமயம் அதிரடியாக விளையாடிய கிளாசென் இப்போட்டியில் அரைசதம் கடந்த நிலையில் 12 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 81 ரன்களில் ஆட்டமிழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கார்பின் போஷ் 40 ரன்களைச் சேர்த்ததை தவிர மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் தென் ஆப்பிரிக்க அணி 42 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 271 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் தரப்பில் சுஃபியான் முகீன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் பாகிஸ்தான் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியதுடன், 3-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் முழுமையாக கைப்பற்றி அசத்தியது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News