South Africa vs Sri Lanka 2nd Test Dream11 Prediction:  தென் ஆப்பிரிக்கா - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 233 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றது. 

Advertisement

இதையடுத்து தென் ஆப்பிரிக்கா - இலங்கை அணிகளுக்கு இடையேயான் இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை (டிசம்பர் 04) க்கெபெர்ஹாவில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியிலும் தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெறும் பட்சத்தில் டெஸ்ட் தொடரை கைப்பற்றுவதுடன், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியளிலும் தங்கள் இடத்தை உறுதிசெய்யும். அதேசமயம் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்புடன் இலங்கை அணியும் கடுமையான சவாலை அளிக்கும் என்பதால் இப்போட்டி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

Advertisement

SA vs SL 2nd Test: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - தென் ஆப்பிரிக்கா vs இலங்கை
  • நேரம் - மதியம் 02:00 மணி (இந்திய நேரப்படி)
  • இடம் - செயின்ட் ஜார்ஜ் பார்க் கிரிக்கெட் மைதானம், க்கெபெர்ஹா

SA vs SL 2nd Test Pitch Report

தென் ஆப்பிரிக்கா - இலங்கை அணிகளுக்கு இடையேயான இந்த டெஸ்ட் போட்டி செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த மைதானத்தில் இதுவரை 32 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், அதில் 14 முறை முதலில் பேட்டிங் செய்ய அணிகளும், 13 முறை இரண்டாவது பேட்டிங் செய்த அணியும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. மேலும் இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரி 312 ரன்களாகவும், கடைசி இன்னிங்ஸ் சராசரி 156 ரன்களாகவும் உள்ளன. மேலும் இந்த மைதானத்தில் குவிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக 549 ரன்களாக உள்ளது. இதனால் இங்கு டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங் செய்வது வெற்றிக்கு வழி வகுக்கலாம். 

SA vs SL 2nd Test: Where to Watch?

Advertisement

தென் ஆப்பிரிக்கா - வங்கதேச டி20 தொடரை இந்தியாவில் ஸ்போர்ட்ஸ் 18 தொலைக்காட்சி நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் நேரலையில் காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

SA vs SL Test Head To Head Record

  • மோதிய போட்டிகள் - 32
  • தென் ஆப்பிரிக்கா- 17
  • இலங்கை - 09
  • முடிவில்லை - 06

South Africa vs Sri Lanka 2nd Test Probable Playing XI

Advertisement

தென் ஆப்பிரிக்கா உத்தேச லெவன்: ஐடன் மார்க்ரம், டோனி டி ஸோர்ஸி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டெம்பா பவுமா (கே), ரியான் ரிக்கெல்டன், டேவிட் பெட்டிங்ஹாம், கைல் வெர்ரைன், மார்கோ ஜான்சன், கேசவ் மஹராஜ், டேன் பீட்டர்சன், ககிசோ ரபாடா.

இலங்கை உத்தேச லெவன்: பதும் நிஷங்கா, திமுத் கருணாரத்னே, தினேஷ் சண்டிமால், ஏஞ்சலோ மேத்யூஸ், கமிந்து மெண்டிஸ், தனஞ்சய் டி சில்வா (கேப்டன்), குசல் மெண்டிஸ், லஹிரு குமார, பிரபாத் ஜயசூரிய, விஷ்வா ஃபெர்னாண்டோ, அசித்த ஃபெர்னாண்டோ.

SA vs SL 2nd Test Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - தினேஷ் சண்டிமால்
  • பேட்ஸ்மேன்கள் - டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டெம்பா பவுமா (துணைக்கேப்டன்), பதும் நிஷங்கா
  • ஆல்-ரவுண்டர்கள் - கமிந்து மெண்டிஸ், மார்கோ ஜான்சன் (கேப்டன்), ஐடன் மார்க்ரம்
  • பந்துவீச்சாளர்கள் - ககிசோ ரபாடா, அசித்த ஃபெர்னாண்டோ, லஹிரு குமாரா
Advertisement

SA vs SL 2nd Test Dream11 Prediction, SA vs SL Dream11 Prediction, Today Match SA vs SL, SA vs SL Test Series, SA vs SL Dream11 Team, Fantasy Cricket Tips, SA vs SL Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between South Africa vs Sri Lanka

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News