South Africa Women vs England Women 3rd T20 Dream11 Prediction: இங்கிலாந்து மகளிர் அணி தற்போது தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த டி20 தொடரின் முதலிரண்டு டி20 போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்று 2-0 என்ற் கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது. 

Advertisement

இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று செஞ்சூரியனில் உள்ள சூப்பர் ஸ்போர்ட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இங்கிலாந்து அணி ஏற்கெனவே டி20 தொடரை கைப்பற்றிய கையோடு இப்போட்டியை எதிர்கொள்வதால், இதிலும் வெற்றிபெற்று தொடரை முழுமையாக கைப்பற்ற முயற்சி செய்யும். அதேசமயம் தொடரை இழந்துள்ள தென் ஆப்பிரிக்க அணி இப்போட்டியிலாவாது வெற்றிபெற்று ஆறுதலை தேடும் முனைப்பில் இப்போட்டியில் விளையாடவுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. 

Advertisement

SA W vs ENG W 3rd T20 Match: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - தென் ஆப்பிரிக்கா மகளிர் vs இங்கிலாந்து மகளிர்
  • இடம் - சூப்பர் ஸ்பேர்ட் கிரிக்கெட் மைதானம், செஞ்சூரிய  - 09:30 PM IST
  • நேரம் - இரவு 9.30 மணி (இந்திய நேரப்படி) 

SA W vs ENG W 3rd T20 Pitch Report

தென் ஆப்பிரிக்கா மகளிர் vs இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான இந்த போட்டி செஞ்சூரியனில் நடைபெறவுள்ளது. இந்த மைதானத்தில் இதுவரை 17 டி20 போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், அதில் 9 முறை முதலில் பேட்டிங் செய்த அணியும், 7 முறை பந்துவீசிய அணியும் வெற்றிபெற்றுள்ளன. மேலும் இந்த மைதானத்தில் முதல் இன்னிங்ஸ் சராசரியானது 178 ரன்களாக உள்ள நிலையில், இங்கு அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக 259 ரன்கள் குவிக்கப்பட்டுள்ளது. இதனால் இங்கு டஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்,

SA W vs ENG W 3rd T20: Live Streaming Details

Advertisement

தென் ஆப்பிரிக்கா மகளிர் vs இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான இந்த டெஸ்ட் தொடரை இந்தியாவில் எந்த தொலைக்காட்சி நிறுவனமும் நேரலையில் ஒளிபரப்பு செய்யவில்லை. இருப்பினும் தொடரை காண விரும்பும் ரசிகர்கள் ஃபேன் கோட் செயலியில் நேரலையில் காணலாம். 

SA W vs ENG W T20I Head to Head Record

  • மோதிய போட்டிகள் -  25
  • இங்கிலாந்து- 22
  • தென் ஆப்பிரிக்கா - 04
  • முடிவில்லை - 01

SA W vs ENG W 3rd T20 Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - எமி ஜோன்ஸ்
  • பேட்ஸ்மேன்கள் - லாரா வால்வார்ட் (துணை கேப்டன்), டேனியல் வெயிட்
  • ஆல்-ரவுண்டர்கள் - நாட் ஸ்கைவர் பிரண்ட் (கேப்டன்), க்ளோ ட்ரையோன், நாதின் டி கிளர்க், ஆன் டிர்க்சன்
  • பந்துவீச்சாளர்கள் - சோஃபி எக்லெஸ்டோன், சாரா க்ளென், சார்லி டீன், அன்யாட் ஹ்லுபி.
Advertisement

South Africa Women vs England Women 3rd T20 Probable Playing XI

தென் ஆப்பிரிக்கா உத்தேச லெவன்: லாரா வோல்வார்ட் (கேப்டன்), தஸ்மின் பிரிட்ஸ், ஃபே டன்னிக்லிஃப், அன்னேரி டெர்க்சன், க்ளோ டிரையன், என்டுமிசோ ஷங்கேஸ், நதின் டி க்ளெர்க், சினாலோ ஜாஃப்டா, நோன்குலுலெகோ மலாபா, அயென்ட் ஹ்லூபி, ஆலிஸ்-எம்.

இங்கிலாந்து உத்தேச லெவன்: மையா பவுச்சர், டேனியல் வையட், சோஃபியா டங்க்லி, நாட் ஸ்கைவர்-பிரண்ட், ஹீதர் நைட் (கே), எமி ஜோன்ஸ், ஃபிரேயா கெம்ப், சோஃபி எக்லெஸ்டோன், சார்லி டீன், சாரா க்ளென், லாரன் ஃபைலர்.

Advertisement

SA W vs ENG W 3rd T20 Dream11 Prediction, SA W vs ENG W Dream11 Team, Fantasy  Cricket Tips, SA W vs ENG W Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between South Africa Women vs England Women

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News