எஸ்ஏ20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 7ஆவது லீக் ஆட்டத்தில் ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியும், கேசவ் மகாராஜ் தலைமையிலான டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன. டர்பனிலுள்ள கிங்ஸ்மீத் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

Advertisement

இதனையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு குயின்டன் டி காக் - மேத்யூ பிரீட்ஸ்கி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஆரம்பம் முதலே தடுமாறிய குயின்டன் டி காக் 2 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரர் மேத்யூ பிரீட்ஸ்கி 13 ரன்களுக்கு நடையைக் கட்டினார். இதையடுத்து கடந்த போட்டியில் சிக்சர் மழை பொழிந்த ஜேஜே ஸ்மட்ஸ் 6 ரன்களிக்கும், அடுத்து  வந்த வியான் முல்டர் 12 ரன்கள் எடுத்த நிலையில் இம்ரான் தாஹிர் வீசிய முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்தார்.

Advertisement

பின்னர் இணைந்த கிமோ பால் - ஹென்ரிச் கிளாசென் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தனர். இருப்பினும் கீமோ பால் 17 ரன்களிலும், அதிரடி வீரர் நிக்கோலஸ் பூரன் 15 ரன்களுக்கும் என நடையைக் கட்ட, மறுபக்கம் வழக்கம் போல் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹென்ரிச் கிளாசென் 32 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

அதன்பின் ஆட்டத்தின் இறுதிவரை களத்தில் இருந்த ஹென்ரிச் கிளாசென் 7 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 64 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்களைச் சேர்த்தது. ஜோபர்க் அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய லிசாத் வில்லியம்ஸ் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News