தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றுவரும் எஸ்ஏ20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 22ஆவது லீக் ஆட்டத்தில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் - பார்ல் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டர்பனிலுள்ள கிங்ஸ்மீத் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு டோனி டி ஸோர்ஸி - மேத்யூ பிரீட்ஸ்கி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் டோனி டி ஸோர்ஸி 6 ரன்களி ஆட்டமிழந்து பெவிலியன் திரும்ப, அடுத்து களமிறங்கிய குயின்டன் டி காக் 6 ரன்களிலும், ஜேஜே ஸ்மட்ஸ் 15 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் இணைந்த பிரீட்ஸ்கி - மார்கஸ் ஸ்டோய்னிஸ் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தனர். 

Advertisement

இதில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய மேத்யூ பிரீட்ஸ்கி தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் பவுண்டரியும் சிக்சர்களுமாக விளாசிய மேத்யூ பிரீட்ஸ்கி 5 பவுண்டரி, 6 சிக்சர்கள் என 78 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து 2 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 38 ரன்களைச் சேர்த்திருந்த மார்கஸ் ஸ்டொய்னிஸும் அதே ஓவரில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். 

இதையடுத்து களமிறங்கிய ஹென்றிச் கிளாசென் ஒருபக்கம் சிக்சர்களாக விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்த, மறுமுனையில் இருந்த வியான் முல்டர் 3 ரன்களில் விக்கெட்டை இழந்தார். ஆனால் மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஹென்றிச் கிளாசென் 16 பந்துகளில் அரைசதம் கடந்ததுடன் 2 பவுண்டரி, 6 சிக்சர்கள் என 50 ரன்களைச் சேர்த்து மிரட்டினார். இதன்மூலம் எஸ்ஏ 20 லீக் தொடரில் அதிவேகமாக அரைசதம் கடந்த வீரர் எனும் சாதனையையும் படைத்தார்.

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்களைச் சேர்த்துள்ளது. பார்ல் ராயல்ஸ் அணி தரப்பில் தப்ரைஸ் ஷம்ஸி மற்றும் ஒபேத் மெக்காய் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இதையடுத்து 209 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி பார்ல் ராயல்ஸ் அணி விளையாடவுள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News