எஸ்ஏ20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் தென் ஆப்பிரிக்காவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 17ஆவது லீக் ஆட்டத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து பார்ல் ராயல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தியது. ஜொஹன்னஸ்பர்க்கிலுள்ள வாண்டரர்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற பார்ல் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்கு வழக்கம் போல் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் - ரீஸா ஹென்றிக்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் மீண்டும் தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஃபாஃப் டூ பிளெசிஸ் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் ஹென்றிஸுடன் இணைந்த டூ ப்ளூய் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினார்.

Advertisement

இதில் 16 பந்துகளில் 4 பவுண்டரி, ஒரு சிக்சர் என 30 ரன்களை எடுத்த நிலையில் டூ ப்ளூய் ஆட்டமிழந்து வெளியேற, அடுத்து களமிறங்கிய மகான்யாவும் 15 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதேசமயம் மறுமுனையில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தி வந்த ரீஸா ஹென்றிக்ஸ் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். 

இறுதியில் ஹென்றிஸுடன் இணைந்து மொயீன் அலியும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த அதுவரை தடுமாறிய ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி, கடைசி இரண்டு ஓவர்களில் மளமளவென சவாலான இலக்கை நோக்கி நகர்ந்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரீஸா ஹென்றிக்ஸ் 7 பவுண்டரி 3 சிக்சர்கள் என 79 ரன்களையும், மொயீன் அலி 2 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 23 ரன்களையும் சேர்த்து அணிக்கு ஃபினீஷிங்கைக் கொடுத்தனர். 

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்களைச் சேர்த்து. பார்ல் ராயல்ஸ் அணி தரப்பில் லுங்கி இங்கிடி, ஃபேபியன் ஆலன், ஆண்டில் பெஹ்லுக்வாயோ ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். இதையடுத்து 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இழக்குடன் பார்ல் ராயல்ஸ் அணி விளையாடவுள்ளது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News