எஸ்ஏ20 2025: ரிக்கெல்டன் அதிரடியில் சூப்பர் கிங்ஸை வீழ்த்தி கேப்டவுன் அசத்தல் வெற்றி!

Updated: Sun, Jan 19 2025 08:16 IST
Image Source: Google

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 லீக் கிரிக்கெட் தொடர் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகின்றன. இதில் நேற்று நடைபெற்ற 13ஆவது லீக் போட்டியில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் இணை தொடக்கம் கொடுத்தனர். கேப்டவுனில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் செய்த சூப்பர் கிங்ஸ் அணிக்கு டெவான் கான்வே - ஃபாஃப் டூ பிளெசிஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். 

இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய ஃபாஃப் டூ பிளெசிஸ் அரைசதம் கடந்து அசத்தினர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முதல் விக்கெட்டிற்கு 97 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். பின்னர் 6 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 61 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் ஃபாஃப் டூ பிளெசிஸ் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரர் டெவான் கான்வே 35 ரன்களைச் சேர்த்த கையோடு ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய லியுஸ் டு ப்ளூய் 5 ரன்களிலும், விஹான் லூப் ரன்கள் ஏதுமின்றியும், டொனவன் ஃபெரீரா 18 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். 

இருப்பினும் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜானி பேர்ஸ்டோவ் 2 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 43 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தனர். இதன்மூலம் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்களைச் சேர்த்தது. கேப்டவுன் அணி தரப்பில் ரீஸா ஹென்றிக்ஸ் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதன்பின் இழக்கை நோக்கி விளையாடிய கேப்டவுன் அணிக்கு ரஸ்ஸி வேன்டர் டூசென் மற்றும் ரியான் ரிக்கெல்டன் இணை முதலில் நிதானமாக விளையாடினாலும், அதன்பின் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். 

இதில் அபாரமாக விளையாடிய ரியான் ரிக்கெல்டன் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதேசமயம் மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரஸ்ஸி வேண்டர் டுசென் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 39 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அவரைத்தொடர்ந்து சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரியான் ரிக்கெல்டன் 8 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 89 ரன்களை எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் களமிறங்கிய ரீஸா ஹென்றிக்ஸ் ஒருபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றார். 

Also Read: Funding To Save Test Cricket

இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரீஸா ஹென்ரிக்ஸ் 34 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணி 15.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய ரியான் ரிக்கெல்டன் ஆட்டநாயகன் விருதை வென்றார். மேலும் இப்போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணி புள்ளிப்பட்டியலின் முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை