எஸ்ஏ20 2025: சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேபை பந்தாடியது பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ்!

Updated: Tue, Jan 14 2025 20:14 IST
Image Source: Google

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் மூன்றாவது சீசன் எஸ்ஏ20 லீக் தொடரில் இன்று நடைபெற்ற 7ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் - பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. செஞ்சூரியனில் உள்ள சூப்பர் ஸ்போர்ட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

அதன்படி களமிறங்கிய அந்த அணியில் டேவிட் பெடிங்ஹாம் 2 ரன்னிலும், ஸாக் கிரௌலி ஒரு ரன்னிலும், டாம் அபெல் 9 ரன்னிலும், கேப்டன் ஐடன் மார்க்ரம் ரன்கள் ஏதுமின்றியும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 11 ரன்னிலும், பேட்ரிக் க்ரூகர் 10 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் அந்த அணி 50 ரன்களில் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது களமிறங்கிய மார்கோ ஜான்சன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய அவர் தனது அரைசதத்தையும் பதிவுசெய்தார். 

பின்னர் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 51 ரன்களைச் சேர்த்த நிலையில் மார்கோ ஜான்சன் விக்கெட்டை இழக்க, மற்ற வீரர்களாலும் எதிரணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பிரிட்டோரியா கேப்பிட்டல் தரப்பில் டேரின் டுபாவில்லன் 3 விக்கெட்டுகளையும், ஈதன் போஷ், ஜிம்மி நீஷம் மற்றும் செனுரன் முத்துசாமி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். 

அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணியின் ரஹ்மனுல்லா குர்பாஸ் 7 ரன்களில் விக்கெட்டை இழந்த நிலையில், அடுத்து களமிறங்கிய கைல் வெர்ரைன் 12 ரன்களுக்கும் என ஆட்டமிழந்தனர். அவர்களைத் தொடர்ந்து 27 ரன்களில் வில் ஜேக்ஸும், 12 ரன்களில் கேப்டன் ரைலீ ரூஸோவ் 12 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் கேப்பிட்டல்ஸ் அணி 61 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் இணைந்த லிவிங்ஸ்டோன் - ஆக்கர்மென் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

Also Read: Funding To Save Test Cricket

இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அக்கெர்மேன் 39 ரன்களையும், லிவிங்ஸ்டோன் 14 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி 16 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. இப்போட்டியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஈதன் போஷ் ஆட்டநாயகன் விருதை வென்றார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை