எஸ்ஏ20 2025: கேன் வில்லியம்சன், கிறிஸ் வோக்ஸை ஒப்பந்தம் செய்த டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ்!

Updated: Fri, Jul 26 2024 20:23 IST
Image Source: Google

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரை பின் பற்றி உலகின் பல்வேறு நாடுகளும் டி20 பிரீமியர் லீக் தொடர்களை நடத்தி வருகின்றனர். அதில் ஆஸ்திரேலியாவின் பிக் பேஷ் லீக், வெஸ்ட் இண்டீஸின் கரீபியன் பிரீமியர் லீக், பாகிஸ்தானின் பாகிஸ்தான் சூப்பர் லீக், வங்கதேசத்தின் பங்களதேஷ் பிரீமியர் லீக், இலங்கையின் லங்கா பிரீமியர் லீக் என ஒவ்வொரு நாடும் தங்களுக்கென தனி டி20 தொடர்களை நடத்தி வருகின்றனர். 

அந்தவகையில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியமும் கடந்தாண்டு முதல் எஸ்ஏ20 லீக் தொடரை நடத்தி வருகிறது. தற்போதுவரை இரண்டு சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ள எஸ்ஏ20 லீக் தொடரானது மூன்றாவது சீசனுக்காக தற்போதில் இருந்தே தயாராகி வருகிறது. மேற்கொண்டு நடைபெற்று முடிந்த இரண்டு எஸ்ஏ20 லீக் தொடரிலும் ஐடன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஈஸ்டர்கேப் அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. 

இந்நிலையில் அடுத்த தொடருக்கான பணிகளை எஸ்ஏ20 தொடரில் பங்கேற்கும் அணிகள் தற்போதில் இருந்தே தொடங்கியுள்ளன. அந்தவகையில் எல்எஸ்ஜி அணியின் உரிமையாளர்களுடைய டர்பன் சூபப்ர் ஜெயண்ட்ஸ் அணியும் எதிர்வரவுள்ள எஸ்ஏ20 லீக் தொடருக்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி எதிர்வரும் எஸ்ஏ 20லீக் தொடருக்கான டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது நியூசிலாந்தின் கேன் வில்லியம்சனை ஒப்பந்தம் செய்துள்ளது. 

மேற்கொண்டு இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் வோக்ஸையும் அந்த அணி ஏலத்திற்கு முன்னரே அணியில் ஒப்பந்தம் செய்துள்ளது. முன்னதாக சில தினங்களுக்கு முன்பு  வெஸ்ட் இண்டீஸின் அதிரடி தொடக்க வீரர் பிரண்டன் கிங்கை டர்பர் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஒப்பந்தம் செய்திருந்த நிலையில், தற்போது மேற்கொண்டு இரு வீரர்களை ஒப்பந்தம் செய்துள்ளது அந்த அணியின் பலத்தைக் கூட்டியுள்ளது. 

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

இதன்மூலம் எதிர்வரும் எஸ்ஏ20 லீக் தொடரில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது கூடுதல் வலிமைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் கடந்த எஸ்ஏ20 லீக் தொடரில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது அதிரடியாக விளையாடி வந்த நிலையிலும், இறுதிப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியிடம் தோல்வியை தழுவி சாம்பியன் பட்டத்தை வெல்லும் வாய்ப்பை இழந்தது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை