SA20 League: பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸை வீழ்த்தி டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் இமாலய வெற்றி!

Updated: Mon, Feb 06 2023 11:02 IST
SA20: Klaasen's Majestic 104 Not Out Keeps DSG's Semifinal Hopes Alive (Image Source: Google)

தென் ஆப்பிரிக்க டி20 லீக் தொடரின் 28ஆவது லீக் போட்டியில் ஈரிடோரியா கேப்பிட்டல்ஸ், டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற ப்ரிடோரியா அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வுசெய்தது. 

இப்போட்டியில் முதலில் களமிறங்கிய டர்பன் சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணியில் ஓபனர்கள் குவின்டன் டி காக் 43 (20), பென் மெக்டெர்மோட் 41 (24) ஆகியோர் அபாரமாக விளையாடி சிறந்த துவக்கத்தை தந்தார்கள். இதனால், பவர் பிளேவில், டர்பன் அணி 76 ரன்களை குவித்து அசத்தியது.

இதனத் தொடர்ந்து கிளாசின் களத்திற்குள் வந்தார். துவக்கம் முதலே அதிரடி காட்டிய அவர், 44 பந்துகளில் 10 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் உட்பட 104 ரன்களை குவித்து கடைசிவரை களத்தில் இருந்தார். இவருடன் பார்ட்னர்ஷிப் அமைத்த பிரீட்ஸ்கி 21 பந்துகளில் 5 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உட்பட 46 ரன்களை சேர்த்து அசத்தினார்.

இப்படி அனைத்து பேட்டர்களும் அசத்தியதால், டர்பன் சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 254/4 ரன்களை குவித்து அசத்தியது. இந்த அணி மொத்தம் 15 சிக்ஸர்களை விளாசியிருந்தது.

இதையடுத்து மெகா இலக்கை துரத்திக் களமிறங்கிய பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணியில் ஏதன் போஸ்ச் 23 (13) மட்டுமே 20+ ரன்களை அடித்தார். அதேசமயம் நட்சத்திர வீரர்களான ரைலீ ரூஸோவ் 18 (12), குஷல் மெண்டிஸ் 10 (9), பிலிப் சால்ட் 1 (3) போன்ற அதிரடி பேட்டர்கள் சிறப்பாக சோபிக்கவில்லை. 

இதனால், பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 103 ரன்களை மட்டும் சேர்த்து ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி படுதோல்வியை சந்தித்தது.

டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தரப்பில் ஜூனியர் தலா 3/33 விக்கெட்களையும், டுவைன் பிரிடோரியஸ், மல்டன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை கைப்பற்றினார்கள். மேலும் தென் ஆப்பிரிக்க டி20 லீக் தொடரில் இதுதான் மிகமோசமான தோல்வியாக மாறியுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை