SA20 League: குசால் மெண்டிஸ் காட்டடி; பார்ல் ராயல்ஸுக்கு இமாலய இலக்கு!

Updated: Tue, Feb 07 2023 22:43 IST
SA20 League: Pretoria Capitals at their innings on 226/5 after a fiery start from Will Kusal Mendis (Image Source: Google)

தென் ஆப்பிரிக்கவின் டி20 லீக் தொடரான எஸ்ஏ20 லீக் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் - பார்ல் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

சென்ஞ்சூரியனில் உள்ள சூப்பர் ஸ்போர்ட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள பார்ல் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது. இப்போட்டியில் பார்ல் ராயல்ஸ் அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தால் அரையிறுதிக்கான வாய்ப்பை இழக்கும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது.

அதன்படி களமிறங்கிய பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணிக்கு பிலிப் சால்ட் - குசால் மெண்டிஸ் இணை அதிரடியான தொடக்கத்தை தந்து அடித்தளம் அமைத்துக்கொடுத்தனர். இதில் 21 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 39 ரன்களைச் சேர்த்திருந்த பிலிப் சால்ட் விக்கெட்டை இழக்க, மறுமுனையில் அதிரடியாக விளையாடிய குசால் மெண்டிஸ் அரைசதம் கடந்து அசத்தினார்.

ஆனால் மறுபக்கம் களமிறங்கிய கேப்டன் டி பிரைன், ரைலீ ரூஸோவ் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்ப, அவர்களைத் தொடர்ந்து வந்த காலின் இங்ராம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தார். பின் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட குசால் மெண்டிஸ் 41 பந்துகளில் 8 பவுண்டரி, 4 சிக்சர்களை விளாசி 80 ரன்களைச் சேர்த்திருந்த குசால் மெண்டிஸ், லுங்கி இங்கிடி பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.

அதன்பின் காலின் இங்ராமுடன் இணைந்த ஜிம்மி நீஷமும் பவுண்டரியும், சிக்சர்களுமாக விளாச அணியின் ஸ்கோரும் 200 ரன்களைத் தாண்டியது. இறுதியில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 226 ரன்களைச் சேர்த்தது.

இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த காலின் இங்ராம் 21 பந்துகளில் 41 ரன்களையும், ஜிம்மி நீஷம் 11 பந்துகளில் 21 ரன்களையும் சேர்த்திருந்தனர். பார்ல் ராயல்ஸ் தரப்பில் லுங்கி இங்கிடி 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை