விராட் கோலிக்கு தனது ஜெர்சியை பரிசளித்த சச்சின் டெண்டுல்கர்!

Updated: Sun, Nov 19 2023 16:00 IST
Image Source: Google

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி குஜராத் மாநிலம் அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

இந்நிலையில், இந்த போட்டியை ஒட்டி சச்சின் டெண்டுல்கர் 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற ஜெர்சியை விராட் கோலிக்கு பரிசாக வழங்கி உள்ளார். இரண்டாவது உலகக் கோப்பை தொடரில் விளையாடும் முதல் இந்திய வீரர் என்ற பெருமையுடன் விராட் கோலி விளையாடி வருகிறார்.

நடப்பு உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் விராட் கோலி சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தனது 50-வது சதத்தை அடித்து அசத்தினார். மேலும் சச்சின் டெண்டுல்கரின் 49 சதங்கள் என்ற சாதனையை விராட் கோலி முறியடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி கோப்பை வெல்லும் முனைப்பில் களமிறங்கி உள்ள நிலையில், இறுதிப் போட்டியை காண சச்சின் டெண்டுல்கர் உள்பட பல்வேறு முன்னணி வீரர்கள், பிரபலங்கள் என பலரும் மைதானத்திற்கு வந்துள்ளனர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::