இந்திய அணியின் வெற்றியைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர்!

Updated: Fri, Jan 05 2024 12:33 IST
இந்திய அணியின் வெற்றியைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர்! (Image Source: Google)

ஒரு நாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடினால் மட்டும்தான் வெற்றி கிடைக்கும். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட் மட்டும்தான் பந்துவீச்சாளர்கள் 20 விக்கெட்டுகளை வீழ்த்தினால் வெற்றி கிடைக்கும். பந்துவீச்சாளர்களின் போட்டியாகவே டெஸ்ட் கிரிக்கெட் காலம் காலமாக இருந்து வருகிறது. 

இந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர்கள் சிறப்பாக பந்து வீசி இரண்டு ரன்களில் வெற்றியை தேடி தந்திருக்கிறார்கள். முதல் இன்னிங்ஸில் சிராஜும் இரண்டாவது இன்னிங்ஸில் பும்ராவும் அபாரமாக செயல்பட்டு தலா ஆறு விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்கள். 

இந்த நிலையில் இந்திய அணி இந்த வெற்றிக்கு சச்சின் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இது குறித்து பேசிய அவர், “தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரை இந்திய அணி சமன் செய்திருப்பதற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். ஐடன் மார்க்கரம் பேட்டிங் செய்த விதம் பிரமாதமாக இருந்தது. இது போன்ற ஆடுகளத்தில் இவ்வாறு அதிரடியாக விளையாடுவது தான் சிறந்த தற்காப்பு முறை என்று நான் கருதுகிறேன். அதேசமயம் பும்ரா சிறப்பாக செயல்பட்டு அசத்தி இருக்கிறார். இது போன்ற ஆடுகளத்தில் எப்படி பந்து வீச வேண்டும் என்பது குறித்து அனைவருக்கும் காட்டியிருக்கிறார்” என்று சச்சின் பாராட்டியுள்ளார். 

இந்த டெஸ்ட் போட்டியின் மூலம் இந்திய அணி ஐசிசி டெஸ்ட் தர வரிசை பட்டிகளிலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலிலும் முதலிடத்தை பிடித்திருக்கிறது. இந்தியா இந்த சைக்கிளில் நான்கு போட்டிகளில் விளையாடி இரண்டு வெற்றி, ஒரு தோல்வி மற்றும் ஒரு டிரா என 54.16 வெற்றி சதவீதத்துடன் முதல் இடத்தில் இருக்கிறது.

 

தற்போது இரண்டாவது இடத்தில் தென் ஆப்பிரிக்காவும் மூன்றாவது இடத்தில் நியூசிலாந்தும், நான்காவது இடத்தில் ஆஸ்திரேலியாவும் ஐந்தாவது இடத்தில் வங்கதேசமும் இருக்கின்றன. பாகிஸ்தான் அணி ஆறாவது இடத்திலும் வெஸ்ட் இண்டீஸ் அணி 7ஆவது இடத்திலும் இங்கிலாந்து அணி எட்டாவது இடத்திலும் இலங்கை ஒன்பதாவது இடத்திலும் உள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை