இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் என்றழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் நெற்று தனது 50ஆவது பிறந்தநாளை கொண்டாடின்னார். சர்வதேச கிரிக்கெட்டில் 24 ஆண்டுகள் விளையாடி, 200 டெஸ்ட், 463 ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டி என மொத்தம் 667 சர்வதேச போட்டிகளில் விளையாடி 100 சதங்களுடன் 34,357 ரன்களை குவித்துள்ளார்.

Advertisement

சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்களை விளாசிய ஒரே வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் சச்சின் டெண்டுல்கர். இந்நிலையில் அவரை கவுரவிக்கும் விதமாக ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தின் ஸ்டாண்டிற்கு சச்சின் டெண்டுல்கரின் பெயரை சூட்டியுள்ளது ஷார்ஜா கிரிக்கெட் மைதானம். 

Advertisement

அவரது 50-வது பிறந்த நாளன்று இந்த கவுரவத்தை அவருக்கு வழங்கி உள்ளது ஷார்ஜா கிரிக்கெட் மைதான நிர்வாகம். அதோடு ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் சச்சின் பதிவு செய்த அந்த இரண்டு சதங்களின் 25ஆவது ஆண்டு கொண்டாட்டமாகவும் இது அமைந்துள்ளது. 

கடந்த 1998இல் ஷார்ஜா மைதானத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஏப்ரல் 22 மற்றும் 24 ஆகிய தேதிகளில் அடுத்தடுத்து இரண்டு சதங்கள் பதிவு செய்திருந்தார் சச்சின். கிரிக்கெட் விளையாட்டுக்காக சச்சின் அளித்த பங்களிப்புக்கு எங்கள் நன்றியைத் தெரிவிக்க விரும்பினோம். அதனால் எங்களால் முடிந்த இதை செய்துள்ளோம் என ஷார்ஜா மைதானத்தின் சிஇஓ, கலாஃப் புகாரீர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய சச்சின் டெண்டுல்கர், “இந்த நேரத்தில் நான் அங்கு இருந்திருக்க வேண்டும் என விரும்புகிறேன். துரதிர்ஷ்டவசமாக சில பணிகள் காரணமாக என்னால் அது முடியாமல் போனது. ஷார்ஜாவில் விளையாடுவது எப்போதுமே அற்புதமான அனுபவமாக இருந்துள்ளது. இந்திய ரசிகர்கள் உட்பட உலக கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஷார்ஜா என்றும் ஸ்பெஷலான ஆடுகளம்தான். கலாஃப் புகாரீர் மற்றும் அவரது குழுவிற்கு நன்றி” என தெரிவித்துள்ளார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News