ZIM vs IND: முதலிரண்டு டி20 போட்டிகளுக்கான இந்திய அணியில் சாய் சுதர்ஷன், ஹர்ஷித் ராணா சேர்ப்பு!
ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியானது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி வரும் ஜூலை 06ஆம் தேதி தொடங்கும் இத்தொடரானது ஜூலை 14ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. மேலும் இத்தொடரின் அனைத்து போட்டிகளும் ஹராரேவில் உள்ள ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் ஷுப்மன் கில் தலைமையிலான இளம் வீரர்கள் அடங்கிய இந்திய அணியானது சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வந்த அபிஷேக் சர்மா, ரியான் பராக், துருவ் ஜூரெல், துஷார் தேஷ்பாண்டே உள்ளிட்ட அறிமுக வீரர்களுக்கு இத்தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதால், அவர்கள் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
அதேசமயம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று முடிந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்த சஞ்சு சாம்சன், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஷிவம் தூபே ஆகியோருக்கும் இத்தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடும் புயல் காரணமாக சஞ்சு சாம்சன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷிவம் தூபே ஆகியோர் விண்டீஸில் இருந்து இந்தியா திரும்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதலிரண்டு டி20 போட்டிகளில் சஞ்சு சாம்சன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷிவம் தூபே ஆகியோர் பங்கேற்க மாட்டார்கள் என பிசிசிஐ அறிவித்துள்ளது. அதேசமயம் ஐபிஎல் தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷாய் சுதர்ஷன், ஹர்ஷித் ராணா மற்றும் விக்கெட் கீப்பர் ஜித்தேஷ்ஆகியோர் முதலிரண்டு டி20 போட்டிகளுக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy
முதலிரண்டு டி20 போட்டிக்கான இந்திய அணி: ஷுப்மான் கில் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், அபிஷேக் சர்மா, சாய் சுதர்ஷன்*, ரின்கு சிங், துருவ் ஜூரல், ஜித்தேஷ் சர்மா*, ரியான் பராக், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அவேஷ் கான், கலீல் அகமது, முகேஷ் குமார், துஷார் தேஷ்பாண்டே, ஹர்ஷித் ராணா*.
- ஜூலை 06 - முதல் டி20 - ஹராரே - மாலை 4.30 மணி (இந்திய நேரப்படி)
- ஜூலை 07 - இரண்டாவது டி20 - ஹராரே - மாலை 4.30 மணி (இந்திய நேரப்படி)