குஜராத் டைட்டன்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணியில் தொடக்க வீரர்கள் சாய் சுதர்ஷன் 48 ரன்களையும், கேப்டன் ஷுப்மன் கில் 76 ரன்களையும், அடுத்து களமிறங்கிய ஜோஸ் பட்லரும் 64 ரன்களையும் சேர்த்து அசத்தினர். இதன்மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழப்பிற்கு 224 ரன்களைச் சேர்த்தது. சன்ரைசர்ஸ் அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜெய்தேவ் உனாத்கட் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

Advertisement

இதனையடுத்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இலக்கை நோக்கி விளையாடி வருகிறது. இந்நிலையில் இப்போட்டியில் 48 ரன்களைச் சேர்த்த குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர் சாய் சுதர்ஷன் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதன்படி ஐபிஎல் தொடர் வரலாற்றில் மிகக்குறைந்த இன்னிங்ஸில் 1500 ரன்களை அடித்த் வீரர் எனும் சாதனையை சாய் சுதர்ஷன் படைத்துள்ளார். முன்னதாக ஷான் மார்ஷ் 36 இன்னிங்ஸில் 1500 ரன்களை எடுத்திருந்ததே இதுநாள் வரை சாதனையாக இருந்தது. 

ஆனால் தற்போது சாய் சுதர்ஷன் 35 இன்னிங்ஸ்களில் 1500 ரன்களை விளாசி புதிய சாதனை படைத்துள்ளார். இது தவிர, டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 2000 ரன்களை (54 இன்னிங்ஸ்) எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையையும் சாய் சுதர்ஷன் பெற்றுள்ளார். மேற்கொண்டு நடப்பு சீசனில் 500 ரன்களை நிறைவு செய்த முதல் வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். அவர் 10 போட்டிகளில் 50.40 சராசரியுடன் 504 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

குஜராத் டைட்டன்ஸ் பிளேயிங் லெவன்: ஷுப்மன் கில் (கேப்டன்), பி சாய் சுதர்சன், ஜோஸ் பட்லர், ஷாருக் கான், வாஷிங்டன் சுந்தர், ராகுல் தெவாடியா, ரஷித் கான், முகமது சிராஜ், ஜெரால்ட் கோட்ஸி, சாய் கிஷோர், பிரசித் கிருஷ்ணா

இம்பேக்ட் வீரர்கள்: இஷாந்த் சர்மா, மஹிபால் லோம்ரோர், அனுஜ் ராவத், அர்ஷத் கான், ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட்

Advertisement

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பிளேயிங் லெவன்: அபிஷேக் சர்மா, இஷான் கிஷான், நிதிஷ் குமார் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென் , அனிகேத் வர்மா, கமிந்து மெண்டிஸ், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஹர்ஷல் படேல், ஜெய்தேவ் உனட்கட், ஜீஷன் அன்சாரி, முகமது ஷமி

Also Read: LIVE Cricket Score

இம்பேக்ட் வீரர்கள்: அபினவ் மனோகர், சச்சின் பேபி, டிராவிஸ் ஹெட், ராகுல் சாஹர், வியான் முல்டர்

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News