தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க முதல் இன்னிங்ஸில் 615 ரன்களைக் குவித்து ஆல் அவுட்டானது. இதையடுத்து விளையாடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 194 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆல் அவுட்டாகி ஃபாலோ ஆன் ஆனாது. 

Advertisement

இந்நிலையில் இப்போட்டியின் போது பாகிஸ்தான் அணியின் இளம் வீரர் சைம் அயூம் ஃபீல்டிங்கின் போது காயமடைந்து களத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். அதன்படி இன்னிங்ஸின் 7ஆவது ஓவரின் போது ரியான் ரிக்கெல்டன் அடித்த பந்தை தடுக்கும் முயற்சின் போது அவர் தனது காலில் பலத்த காயத்தை சந்தித்தார். ஸ்கேன் பரிசோதனையின் முடிவில், அவரது காயம் தீவிரமடைந்ததை தொடர்ந்து இப்போட்டியில் இருந்து சைம் அயூப் விலகியதாக அறிவிக்கப்பட்டது.

Advertisement

மேலும் அவர் தனது காயத்தில் இருந்து குணமடைய குறைந்தது 6 வாரங்கள் தேவைப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது. இதனால் பாகிஸ்தானில் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் கோப்பை தொடரிலும் சைம் அயூப் பங்கேற்க மாட்டார் என்பது உறுதியாகியுள்ளதால், அது பாகிஸ்தான் அணிக்கு பெரும் பின்னடையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சைம் அயூப் மேல் சிகிச்சைகாக லண்டன் செல்லவுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து பேசிய பிசிபி தலைவர் மொஹ்சின் நக்வி, “சைம் அயூப் ஒரு ஸ்டைலான மற்றும் சிறந்த பேட்டர் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு ஒரு மிகப்பெரும் சொத்து. அவர் பூரண குணமடைய அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறோம். இந்நிலையில் மேல் சிகிச்சைக்காக அவர் கேப் டவுனில் இருந்து லண்டனுக்கு செல்லும் அடுத்த விமானத்தில் செல்லவுள்ளார். மேலும் அவருடன் உதவிப் பயிற்சியாளர் அசார் மஹ்மூத்தும் உடன்செல்வார்” என்று தெரிவித்துள்ளார். 

பாகிஸ்தான் அணிக்காக 2024ஆம் ஆண்டில் அறிமுகமான சைம் அயூப் இதுவரை 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3 அரைசதங்களுடன் 364 ரன்களையும், 9 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 3 சதம் மற்றும் ஒரு அரைசதத்துடன் 515 ரன்களையும், 27 டி20 போட்டிகளில் 498 ரன்களையும் சேர்த்துள்ளார். தற்சமயம் சிறப்பான ஃபார்மில் இருக்கும் சைம் அயூப் காயத்தால் சாம்பியன்ஸ் கோப்பை தொடரை தவறவிடுவது அந்நாட்டு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News