Saim ayub injured
மேல் சிகிச்சைக்காக லண்டன் செல்லும் சைம் அயூப்!
தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க முதல் இன்னிங்ஸில் 615 ரன்களைக் குவித்து ஆல் அவுட்டானது. இதையடுத்து விளையாடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 194 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆல் அவுட்டாகி ஃபாலோ ஆன் ஆனாது.
இந்நிலையில் இப்போட்டியின் போது பாகிஸ்தான் அணியின் இளம் வீரர் சைம் அயூம் ஃபீல்டிங்கின் போது காயமடைந்து களத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். அதன்படி இன்னிங்ஸின் 7ஆவது ஓவரின் போது ரியான் ரிக்கெல்டன் அடித்த பந்தை தடுக்கும் முயற்சின் போது அவர் தனது காலில் பலத்த காயத்தை சந்தித்தார். ஸ்கேன் பரிசோதனையின் முடிவில், அவரது காயம் தீவிரமடைந்ததை தொடர்ந்து இப்போட்டியில் இருந்து சைம் அயூப் விலகியதாக அறிவிக்கப்பட்டது.
Related Cricket News on Saim ayub injured
-
சாம்பியன்ஸ் கோப்பை தொடரை தவறவிடும் சைம் அயூப்; பாக்., ரசிகர்கள் அதிர்ச்சி!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது காயமடைந்த பாகிஸ்தான் வீரர் சைம் அயூப், காயத்தில் இருந்து குணமடைய 6 வாரங்கள் தேவைப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ...
-
SA vs PAK: காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகினார் சைம் அயூப்!
ஃபீல்டிங்கின் போது காயமடைந்த பாகிஸ்தான் அணியின் சைம் அயூப், தனது காயம் தீவிரமடைந்ததை தொடர்ந்து தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் இருந்து பாதியிலேயே விலகியுள்ளார். ...
-
காயமடைந்து பாதியிலேயே வெளியேறிய சைம் அயூப் - வைரலாகும் காணொளி!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் சைம் அயூப் காயமடைந்து களத்தில் இருந்து வெளியேறிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24