இந்திய அணி சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக முன்னேற வேண்டியது அவசியம் - சல்மான் பட்!

Updated: Fri, Aug 09 2024 13:50 IST
Image Source: Google

இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 3-0 என்ற கணக்கில் இலங்கை அணியை வீழ்த்திய்துடன் தொடரையும் முழுமையக கைப்பற்றி அசத்தியது. இதனையடுத்து நடைபெற்ற ஒருநாள் தொடரின் முதல் போட்டியானது டையில் முடிவடைந்தது.

அதன்பின் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றிருந்த நிலையில், நடைபெற்று முடிந்த  மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியிலும் இலங்கை அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், ஒருநாள் தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணியானது எதிராக 27 வருடங்களுக்கு பின், இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியும் சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில் இத்தொடரில் இந்திய அணி பேட்டர்கள் ரோஹித் சர்மாவைத் தவிர்த்து, மற்ற எந்தவொரு வீரர்கள் பொறுப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தவில்லை. அதிலும் குறிப்பாக சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக இத்தொடர் முழுவதுமே இந்திய அணி பேட்டர்கள் சோபிக்க முடியாமல் அடுத்தடுத்து தங்கள் விக்கெட்டுகளை இழந்தனர். இந்நிலையில் இந்திய வீரர் சுழற்பந்து வீச்சளர்களுக்கு எதிராக தங்கள் அனுகுமுறையை மாற்ற வேண்டியது அவசியம் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் சல்மான் பட் கருத்து கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “சுழலுக்கு எதிராக விளையாடுவதில் இந்தியா தங்களுடைய அணுகுமுறையை மாற்றி அமைக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஒரு கட்டத்தில் அவர்கள் அதில் சிறந்தவர்களாக இருந்தனர். ஆனால் சமீப காலங்களில் சுழற்பந்துவீச்சுக்கு எதிராக விளையாடுவதில் இந்திய அணி சரியாக செயல்படுவதில்லை. இத்தொடரில் சூர்யகுமாரை பயிற்சியாளர் கம்பீர் பயன்படுத்தியிருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

மேலும் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் சிறப்பாக பந்து வீசினர்.  அவர்கள் உலக சாம்பியனை 3 வகையான துறைகளிலும் வீழ்த்தியுள்ளனர். நீங்கள் இலங்கையை பாராட்ட வேண்டும். இது இந்தியா விழித்துக் கொள்ள வேண்டிய நேரமாகும். இந்த சுற்றுப்பயணத்தை மகிழ்ச்சியாக தொடங்கிய அவர்களுக்கு இப்படி நடந்துள்ளது. அவர்களின் புதிய பயிற்சியாளர் சிலவற்றை மாற்றுவதைப் பற்றி சிந்திக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை