ஐபிஎல், டி20 கிரிக்கெட்டில் சாதனை படைத்த சஞ்சு சாம்சன்!

Updated: Wed, May 21 2025 12:51 IST
Image Source: Google

டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தன் ராயல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் எம் எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது.

இந்நிலையில் இப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் ஐபிஎல் வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். அந்தவகையில் சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் அவர் 41 ரன்களைச் சேர்த்ததன் மூலம், ஐபிஎல் தொடர் வரலாற்றில் ராஜஸ்தான் ரயல்ஸ் அணிக்காக 4000 ரன்களை பூர்த்தி செய்தார். இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 4ஆயிரம் ரன்களைச் சேர்த்த முதல் வீரர் எனும் சாதனையைப் படைத்துள்ளார். 

அவருக்கு அடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அதிக ரன்கள் அடுத்த வீரர்கள் பட்டியலில் ஜோஸ் பட்லர் (3055), அஜிங்கியா ரஹானே (2810) மற்றும் ஷேன் வாட்சன் (2372) போன்ற வீரர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல்லில் மொத்தம் 177 போட்டிகளில் விளையாடியுள்ள சாம்சன், 4679 ரன்கள் எடுத்துள்ளார். இதில், 149 போட்டிகள் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காகவும், 28 போட்டிகள் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காகவும் விளையாடிவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அதிக ரன்கள் எடுத்த வீரர்கள்

  • சஞ்சு சாம்சன் – 4001*
  • ஜோஸ் பட்லர் – 3055
  • அஜிங்க்யா ரஹானே – 2810
  • ஷேன் வாட்சன் – 2372
  • யஷஸ்வி ஜெய்ஸ்வால் – 2166

இது மட்டுமல்லாமல், ஐபிஎல் தொடர் வரலாற்றில் ஒரு அணிக்காக 4000 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன்களின் பட்டியலில் சஞ்சு சாம்சன் இப்போது இணைந்துள்ளார். அவருக்கு முன், விராட் கோலி (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு), ரோஹித் சர்மா (மும்பை இந்தியன்ஸ்), தோனி மற்றும் ரெய்னா (சிஎஸ்கே), ஏபி டி வில்லியர்ஸ் (ஆர்சிபி) மற்றும் டேவிட் வார்னர் (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்) ஆகியோர் இந்த சாதனையைச் செய்துள்ளனர்.

ஐபிஎல் தொடரில் ஒரே அணிக்காக அதிக ரன்கள் எடுத்த வீரர்கள்

  • விராட் கோலி (ஆர்சிபி) – 8509
  • ரோஹித் சர்மா (மும்பை இந்தியன்ஸ்) – 5758
  • எம்எஸ் தோனி (சிஎஸ்கே) – 4865
  • சுரேஷ் ரெய்னா (சிஎஸ்கே) – 4687
  • ஏபி டி வில்லியர்ஸ் (ஆர்சிபி) – 4491
  • டேவிட் வார்னர் (எஸ்ஆர்எச்) – 4014
  • சஞ்சு சாம்சன் (ராஜச்தான் ராயல்ஸ்) – 4001*

இதுதவிர்த்து சஞ்சு சாம்சன் இப்போட்டியில் 2 சிக்ஸர்களை அடித்ததன் மூலம் டி20 கிரிக்கெட்டில் தனது 350 சிக்ஸர்களை பூர்த்தி செய்துள்ளார். இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் 350 அல்லது அதற்கு மேற்பட்ட சிக்ஸர்களை அடித்த 5ஆவது இந்திய வீரர் எனும் பெருமையைப் பெற்றுள்ளார். இதற்கு முன் ரோஹித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் மற்றும் எம் எஸ் தோனி ஆகியோர் மட்டுமே இந்த மைல் கல்லை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Also Read: LIVE Cricket Score

டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள்

  • ரோஹித் சர்மா - 542 சிக்ஸர்கள்
  • விராட் கோலி - 434 சிக்ஸர்கள் 
  • சூர்யகுமார் யாதவ் - 368 சிக்ஸர்கள்
  • எம் எஸ் தோனி - 350 சிக்ஸர்கள்
  • சஞ்சு சாம்சன் - 350 சிக்ஸர்கள்
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை