சஞ்சு சாம்சனுக்கு தொடர்ந்து மறுக்கப்படும் வாய்ப்புகள் - ரசிகர்கள் கொந்தளிப்பு!

Updated: Sun, Nov 20 2022 14:43 IST
'Sanju Samson is always unfairly treated', Fans slam Team India (Image Source: Google)

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் போட்டி மழை காரணமாக ரத்தான நிலையில், இன்று இரண்டாவது டி20 போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டிக்கான டாஸை வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

இந்த பிட்சில் முதலில் பேட்டிங் செய்யும் அணிதான் அனைத்து முறையும் வென்றுள்ளது. இந்நிலையில், நியூசிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போட்டிக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் பெயர் இடம்பெறவில்லை. டி20 உலகக் கோப்பை 2022 தொடருக்கு முன், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் சஞ்சு சாம்சன் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். குறிப்பாக பினிஷராகவும் செயல்பட்டார். 

இதனால், டி20 உலகக் கோப்பை 2022 தொடர் முடிந்தப் பிறகு சாம்சனுக்கு தொடர்ந்து அணியில் இடம் கிடைக்கும் எனக் கருதப்பட்டது. ஆனால், தற்போது நியூசிலாந்துக்கு எதிராக முதல் டி20 போட்டியிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளார்.

2019ஆம் ஆண்டிலேயே இந்திய அணிக்கு அறிமுகமான போதும், இதுவரை இந்திய அணிக்காக மொத்தம் 10 ஒருநாள், 16 டி20 போட்டிகளில் மட்டும்தான் இந்திய அணிக்காக விளையாடியிருக்கிறார். ஐபிஎலில் தொடர்ந்து ரன்களை குவித்து வரும் நிலையில், இவருக்கு ரெகுலராக வாய்ப்பு கிடைக்காதது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த டி20 உலகக் கோப்பை 2022 தொடருக்கான இந்திய அணியில் இவரை சேர்க்காததால், ரசிகர்கள் போராட்டம் அறிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை