ரஞ்சி கோப்பை 2022/23: கம்பேக் ஆட்டத்தில் சிக்சர் மழை பொழிந்த சஞ்சு சாம்சன்; பிசிசிஐக்கு பதிலடி!

Updated: Tue, Dec 13 2022 20:25 IST
Image Source: Twitter

ரஞ்சிக் கோப்பை தொடர் இன்று துவங்கி, பிப்ரவரி 16ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இன்றைய லீக் ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் கேப்டனாக இருக்கும் கேரள அணியும், ஜார்கண்ட் அணியும் மோதின.

இப்போட்டியில் டாஸ் வென்ற சஞ்சு கேரள அணியின் கேப்டன் சாம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இருப்பினும், சாம்சன் ஓபனராக களமிறங்கவில்லை. அந்த அணி களத்திற்குள் வந்த பிரேம் 79 ரன்களையும், கம்முமல் 50 ரன்களையும் சேர்த்து தொடர்ந்து அபாரமாக விளையாடி அடித்தளம் அமைத்தனர்.

இதையடுத்து களமிறங்கிய சோன் ரோஜர் ஒரு ரன்னிலும், சச்சின் பேபி ரன் ஏதுமின்றியும் வந்த வேகத்தில் நடையைக் கட்டினார்கள். இதனைத் தொடர்ந்து கேப்டன் சஞ்சு சாம்சன், அக்ஷை சந்திரன் இருவரும் பார்ட்னர்ஷிப் அமைக்க ஆரம்பித்தார்கள்.

சந்திரன் நிதானமாக விளையாடி வந்த நிலையில், மறுமுனையில் சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாட ஆரம்பித்தார். இதனால், ஸ்கோர் மளமளவென உயர ஆரம்பித்தது. இதனால் இப்போட்டியில் சதமடித்து அசத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சன் மொத்தம் 108 பந்துகளில் 4 பவுண்டரி, 7 சிக்ஸர்கள் உட்பட 72 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்ததுடன், சதமடிக்கும் வாய்ப்பையும் தவறவிட்டார்.


சாம்சன் ஆட்டமிழந்தப் பிறகு அக்ஷை சந்திரன் 39 ரன்னிலும், சிஜோமோன் 28 ரன்னிலும் களத்தில் இருக்கிறார்கள். இதன்மூலம் முதல் நாள் ஆட்டம் நேர முடிவுக்கு கேரள அணி 6 விக்கெட்டுகளை இழந்து 276 ரன்களைச் சேர்த்துள்ளது. ஜார்கண்ட் அணி தரப்பில் ஷபாஸ் நதீம் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இந்நிலையில், சாம்சன் அடித்த ஒவ்வொரு சிக்ஸரும் பிசிசிஐக்கு பதிலடியாக பார்க்கிறோம் என ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள். சாம்சன் சரியான பார்மில் இருக்கும் நிலையில், தொடர்ந்து சொதப்பி வரும் ரிஷப் பந்திற்குதான் ரெகுலராக இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கிறது. 

இதனால்தான், சாம்சன் ரஞ்சிக் கோப்பையில் விளையாடி தனது ஃபார்மை நிரூபித்து, அணிக்கு திரும்ப முடிவு செய்துள்ளார். இந்நிலையில், முதல் போட்டியின் முதல் இன்னிஸ்லேயே இவர் அதிரடி காட்டியுள்ளார். இனி வரும் போட்டிகளிலும் சாம்சன் மிரட்டலாக விளையாடும் பட்சத்தில், இவரை பிசிசிஐ தவிர்க்கவே முடியாத நிலை ஏற்படும் என விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை