SAW vs ENGW, Only Test: தென் ஆப்பிரிக்காவை 283 ரன்களில் வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி!

Updated: Tue, Dec 17 2024 21:24 IST
Image Source: Google

இங்கிலாந்து மகளிர் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும், ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கிலும், டி20 தொடரை 2-1 என்ற கணக்கிலும் இங்கிலாந்து அணி கைப்பற்றி அசத்தியது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் போட்டியானது ப்ளூம்ஃபோன்டைனில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இப்போட்டியில் டாஸ் வென்ற முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து மகளிர் அணியானது மையா பௌச்சர் மற்றும் நாட் ஸ்கைவர் பிரண்ட் ஆகியோரது அபாரமான சதத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்பிற்கு 395 ரன்களைச் சேர்த்த நிலையில்  டிக்ளர் செய்வதாக அறிவித்தது. இதில் அதிகபட்சமாக நாட் ஸ்கைவர் பிரண்ட் 128 ரன்களையும், மையா பௌச்சர் 126 ரன்களையும் சேர்த்து தனது விக்கெட்டை இழந்தனர். தென் ஆப்பிரிக்க தரப்பில் நோன்குலுலேகோ ம்லபா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் கேப்டன் லாரா வோல்வார்ட் அரைசதம் கடந்து அசத்தினார். 

அதன்பின் 65 ரன்னில் வோல்வார்ட் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீராஙகனைகளில் மாரிஸான் கேப் 57 ரன்களையும், சுனேஷ் லூஸ் 56 ரன்க்ளையும் சேர்த்து விக்கெட்டை இழந்தனர். இவர்களைத் தவிர்த்து மற்ற வீராங்கனைகள் சோபிக்க தவறியதால் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 281 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணி தரப்பில் லாரன் பெல் 4 விக்கெட்டுகளையும், லாரன் ஃபிலர், ரியானா மெக்டொனால்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 114 ரன்கள் முன்னிலைப் பெற்றது.

அதன்பின் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீராங்கனை மையா பௌச்சர் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். இதனால் இங்கிலாந்து மகளிர் அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 31 ரன்களைச் சேர்த்தது. இதையடுத்து இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தை டாமி பியூமண்ட் 8 ரன்களுடனும், ஹீதர் நைட் 19 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் பியூமண்ட் 12 ரன்னில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீராங்கனைகளும் அடுத்தடுத்து தென் ஆப்பிரிக்க பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஆட்டமிழந்தனர். 

இருப்பினும் இப்போட்டியில் சிறப்பாக விளையாடி வந்த கேப்டன் ஹீதர் நைட் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 90 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இதனால் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 236 ரன்களில் ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்க தரப்பில் நோன்குலுலேகோ ம்லபா 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன் காரணமாக தென் ஆப்பிரிக்க அணிக்கு 351 ரன்கள் என்ற இலக்கானது நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

Also Read: Funding To Save Test Cricket

அந்த அணியில் மரிஸான் கேப் 21 ரன்களையும், நோன்குலுலேகோ ம்லபா 14 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீராங்கனைகள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் தென் ஆப்பிரிக்க அணி இரண்டாவது இன்னிங்ஸில் 64 ரன்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணி தரப்பில் லாரன் பெல் 4 விக்கெட்டுகளையும், சோஃபி எக்லெஸ்டோன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் இங்கிலாந்து மகளிர் அணி 286 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை