இங்கிலாந்து மகளிர் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும், ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கிலும், டி20 தொடரை 2-1 என்ற கணக்கிலும் இங்கிலாந்து அணி கைப்பற்றி அசத்தியது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் போட்டியானது இன்று ப்ளூம்ஃபோன்டைனில் இன்று தொடங்கியது.

Advertisement

இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியில் தொடக்க வீராங்கனை டாமி பியூமண்ட் 21 ரன்னிலும், அடுத்து களமிறங்கிய கேப்டன் ஹீதர் நைட் 20 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். பின்னர் இணைந்த மையா பௌச்சர் - நாட் ஸ்கைவர் பிரண்ட் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடியதுடன் இருவரும் சதமடித்து அசத்தினர். மேற்கொண்டு மூன்றாவது விக்கெட்டிற்கு 174 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். 

Advertisement

பின்னர் 22 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 126 ரன்களைச் சேர்த்த நிலையில் மைய பௌச்சர் தனது விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய டேனியல் வையட்12 ரன்களிலும், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நாட் ஸ்கைவர் பிரண்ட் 18 பவுண்டரிகளுடன் 128 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். பின்னர் களமிறங்கிய வீராங்கனைகளில் ஏமி ஜோன்ஸ் 39 ரன்களையும், சோஃபி எக்லெஸ்டோன் 21 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். 

இதனால் இங்கிலாந்து மகளிர் அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 395 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் டிக்ளர் செய்வதாக அறிவித்தது. தென் ஆப்பிரிக்க தரப்பில் நோன்குலுலேகோ ம்லபா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 17 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் லாரா வோல்வார்ட் 8 ரன்களுடனும், அன்னேக் போஷ் 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இதனையடுத்து தென் ஆப்பிரிக்க அணி 378 ரன்கள் பின் தங்கிய நிலையில் நாளை இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News