எஸ்ஏ20 2024 இறுதிப்போட்டி: டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் vs சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

Updated: Sat, Feb 10 2024 12:33 IST
எஸ்ஏ20 2024 இறுதிப்போட்டி: டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் vs சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் - போட்டி முன்னோட்டம் (Image Source: Google)

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வந்த எஸ்ஏ20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் இன்றுடன் முடிவடைகிறது. இதில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் ஐடன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியை எதிர்த்து கேசவ் மகாராஜ் தலைமையிலான டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி விளையாடவுள்ளது. இதில் சன்ரைசர்ஸ் அணி ஏற்கெனவே முதல் சீசனில் கோப்பையை வென்று அசத்தியதைப் போன்று, இரண்டாவது முறையும் சாம்பியன் பட்டத்தை வெல்ல ஆவலுடன் உள்ளது. அதேசமயம் நடப்பு சீசனில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய வரும் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதல் சாம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்புடன் உள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் vs டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ்
  • இடம் - நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானம், கேப்டவுன்
  • நேரம் - இரவு 9 மணி (இந்திய நேரப்படி)

பிட்ச் ரிப்போர்ட்

இப்போட்டி நடைபெறும் நியூலேண்ட்ஸ் ஆடுகளம் பேட்டிங் மற்றும் பந்துவீச்சுக்கு சாதகமான மைதானமாக பார்க்கப்படுகிறது. இதனால் இங்கு  பேட்டர் மற்றும் பந்துவீச்சாளர் இடையே பெரிய போட்டியை எதிர்பார்க்கலாம். மேலும் இங்கு முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் சராசரியாக 175 ரன்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங் செய்வது வெற்றிக்கு உதவலாம்.

நேரலை

தென் ஆப்ப்ரிக்க டி20 தொடரை இந்திய ரசிகர்கள் ஸ்போர்ட்ஸ் 18 மற்றும் ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் நேரலையில் கண்டு ரசிக்கலாம்.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 05
  • டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் - 02
  • சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் - 02
  • முடிவில்லை - 01

உத்தேச லெவன்

டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ்: மேத்யூ பிரீட்ஸ்கி, குயின்டன் டி காக், பனுகா ராஜபக்சா, டுவைன் பிரிட்டோரியஸ், ஹென்ரிச் கிளாசென், ஜேஜே ஸ்மட்ஸ், வியான் முல்டர், கேசவ் மகராஜ் (கே), ரீஸ் டாப்லி, ஜூனியர் தாலா, நவீன் உல் ஹக்.

சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப்: ஜோர்டான் ஹர்மன், டேவிட் மாலன், டாம் அபெல், ஐடன் மார்க்ரம் (கே), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், பேட்ரிக் க்ரூகர், லியாம் டௌசன், மார்கோ ஜான்சன், சைமன் ஹார்மர், டேனியல் வோரால், ஒட்னியல் பார்ட்மேன்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்கள் - மேத்யூ பிரீட்ஸ்கி (துணை கேப்டன்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ்
  • பேட்ஸ்மேன்கள் - ஹென்ரிச் கிளாசென், ஜோர்டான் ஹர்மன், டேவிட் மாலன்
  • ஆல்ரவுண்டர்கள் - ஜேஜே ஸ்மட்ஸ் (கேப்டன்), ஐடன் மார்க்ரம், மார்கோ ஜான்சன்
  • பந்துவீச்சாளர்கள் - டேனியல் வோரால், ரீஸ் டாப்லி, நூர் அஹ்மத்.

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை