San Francisco Unicorns vs MI New York Eliminator Dream11 Prediction, MLC 2025: மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசான் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நாளை நடைபெறும் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் எம்ஐ நியூயார்க் மற்றும் சன் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. 

Advertisement

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது  டல்லாஸில் உள்ள கிராண்ட் பிரெய்ரி மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு எம்எல்சி தொடரில் இவ்விரு அணிகளும் மோதிய லீக் போட்டிகளில் சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணி இரண்டிலும் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. இதனால் இப்போட்டியிலும் யூனிகார்ன்ஸ் அணி வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேற முயற்சி செய்யும். அதேசமயம் நியூயார்க் அணி முந்தைய தோல்விகளுக்கு இப்போட்டியில் பதிலடி கொடுக்கும் முனைப்பில் விளையாடவுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

Advertisement

SF vs NY Match Details

  • மோதும் அணிகள்- எம்ஐ நியூயார்க் vs சன் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ்
  • இடம் - கிராண்ட் பிரெய்ரி, டல்லாஸ்
  • நேரம் - ஜூலை 10, அதிகாலை 5.30 மணி (இந்திய நேரப்படி)

Grand Prairie Stadium, Dallas  Pitch Report

டல்லாஸில் உள்ள கிராண்ட் பிரெய்ரி மைதானத்தில் இதுவரை 10 டி20 போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், அதில் முதலில் பேட்டிங் செய்த அணி 4 போட்டிகளிலும், இரண்டாவது பேட்டிங் செய்த அணி 6 முறையும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. இந்த மைதானத்தில் முதல் இன்னிங்ஸ் சராசரியானது 144 ரன்களாக உள்ள நிலையில், இங்கு குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக 197 ரன்கள் உள்ளன. இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீசுவது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

SF vs NY: Where to Watch?

Advertisement

எம்எல் சிகிரிக்கெட் தொடரின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி இந்தியாவில் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஜியோ ஹாட்ஸ்டாரிலும் நேரலையில் கணலாம்.

SF vs NY Dream11 Team

  • விக்கெட் கீப்பர்கள் - நிக்கோலஸ் பூரன் (துணைக்கேப்டன்), டிம் செஃபெர்ட்
  • பேட்ஸ்மேன்கள் - மோனாங்க் படேல், ஜேக் ஃபிரேசர் மெக்குர்க், சஞ்சய் கிருஷ்ணமூர்த்தி
  • ஆல்-ரவுண்டர்கள் - மேத்யூ ஷார்ட் (துணை கேப்டன்), கீரென் பொல்லார்ட், மைக்கேல் பிரேஸ்வெல்
  • பந்துவீச்சாளர்கள்-  டிரென்ட் போல்ட், சேவியர் பார்ட்லெட், பென் லிஸ்டர்

SF vs NY Predicted Playing 11

Advertisement

MI New York Probable XI : மோனாங்க் படேல், நிக்கோலஸ் பூரன் (கேப்டன்), ஷரத் லும்பா, தஜிந்தர் தில்லான், மைக்கேல் பிரேஸ்வெல், டெலானோ போட்ஜிட்டர், சன்னி படேல், ஹீத் ரிச்சர்ட்ஸ், நோஸ்துஷ் கென்ஜிகே, டிரென்ட் போல்ட், குன்வர்ஜீத் சிங்

San Francisco Unicorns Probable XI : மேத்யூ ஷார்ட் (கேப்டன்), டிம் செஃபெர்ட், ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க், சஞ்சய் கிருஷ்ணமூர்த்தி, ஹசன் கான், ரொமாரியோ ஷெப்பர்ட், ஹம்மாத் அசாம், சேவியர் பார்ட்லெட், கரிமா கோர், பிராடி கோச், பென் லிஸ்டர்

SF vs NY Dream11 Prediction, SF vs NY Dream11 Team, Major League Cricket, Fantasy Cricket Tips, MLC 2025, SF vs NY Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between San Francisco Unicorns vs MI New York MLC 2025, Major League Cricket 2025

Also Read: LIVE Cricket Score
Advertisement

Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News