SAW vs WIW: விண்டீஸை வீழ்த்தி தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா!

Updated: Sun, Feb 06 2022 21:38 IST
Shabnim Ismail four-fer helps South Africa clinch series (Image Source: Google)

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த வெஸ்ட் இண்டீஸ்  மகளிர் அணி 4 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது.

இதில் இரு அணிகளுக்கும் இடையேயான 4ஆவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. 

அதன்படி களமிறங்கிய அந்த அணி 49.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 174 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக கிசியா நைட் 48 ரன்களையும், டோட்டின் 36 ரன்களையும் எடுத்தனர். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் இஸ்மைல் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இதையடுத்து இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்க மகளிர் அணியில் லாரா வோல்வார்ட் 23 ரன்னிலும், டஸ்மின் பிரிட்ஸ் 20 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 

அதன்பின் களமிறங்கிய அன்ட்ரீ ஸ்டெயின் - சுனே லூஸ் ஆகியோர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். 

இதில் அன்ட்ரீ ஸ்டெயின் அரைசதம் கடந்தார். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 39.5 ஓவர்களிலேயே இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. 

இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 4 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தினார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை