AFG vs PAK: புதிய கேப்டனுடன் பாகிஸ்தன் டி20 அணி அறிப்பு!

Updated: Mon, Mar 13 2023 20:34 IST
Image Source: Google

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில், தகுதிச்சுற்று போட்டிகள் வரும் 15ஆம் தேதி முதல் தொடங்குகின்றன. மார்ச் 19ஆம் தேதியுடன் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் முடிவடைகிறது. 

அதன்பின்னர் பாகிஸ்தான் - ஆஃப்கானிஸ்தான் இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. இத்தொடரான மார்ச் 25, 27 மற்றும் 29 ஆகிய தேதிகளில் பாகிஸ்தான் - ஆஃப்கானிஸ்தான் இடையேயான 3 டி20 போட்டிகள் நடக்கின்றன. 

இந்த தொடரில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் விளையாடாததால் இந்த தொடருக்கான டி20 அணியின் கேப்டனாக ஷதாப் கான் நியமிக்கப்பட்டுள்ளார். ஷதாப் கான் தலைமையிலான பாகிஸ்தான் டி20 அணியில் வழக்கமான வீரர்கள் அனைவரும் இடம்பெற்றுள்ளனர். மேலும் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் அபாரமாக பந்துவீசி அனைவரையும் கவர்ந்த வேகப்பந்து வீச்சாளர் இஷனுல்லா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் டி20 அணி: ஷதாப் கான் (கேப்டன்), அப்துல்லா ஷாஃபிக், அசாம் கான், ஃபஹீம் அஷ்ரஃப், இஃப்திகார் அகமது, இஷானுல்லா, இமாத் வாசிம், முகமது ஹாரிஸ், முகமது நவாஸ், முகமது வாசிம், நசீம் ஷா, சயிம் அயுப், ஷான் மசூத், டயாப் தாஹிர், ஸமான் கான்..

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை