ஐசிசி உலகக்கோப்பை 2023: ரிஸ்வான், ஷஃபீக் அபார சதம்; இலங்கையை வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றி!

Updated: Tue, Oct 10 2023 22:26 IST
ஐசிசி உலகக்கோப்பை 2023: ரிஸ்வான், ஷஃபீக் அபார சதம்; இலங்கையை வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றி! (Image Source: Google)

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 8ஆவது லீக் போட்டி இன்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணியும், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா தங்களது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். 

அதன்படி களமிறங்கிய இலங்கை அணிக்கு குசால் பெரேரா - பதும் நிஷங்கா இணை களமிறங்கினர். இதில் குசால் பெரேரா ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளிடததார். இதையடுத்து ஜோடி சேர்ந்த பதும் நிஷங்கா - குசால் மெண்டிஸ் இணை அதிரடியான ஆட்டை வெளிப்படுத்தி அணியின் ஸ்கொரை மளமளவென உயர்த்தினர். 

இதில் அரைசதம் கடந்த பதும் நிஷங்க 51 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். இருப்பினும் மூன்றாவது வீரராக களமிறங்கிய குசால் மெண்டிஸ் தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம் பாகிஸ்தான் பவுலர்களை பந்தாடினார். இதில் அபாரமாக விளையாடிய குசால் மெண்டிஸ் 65 பந்துகளில் தனது முதல் உலகக்கோப்பை சதத்தைப் பதிவுசெது அசத்தினார். 

இன்றைய போட்டியில் 77 பந்துகளை சந்தித்த அவர் 14 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்கள் என 122 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய சரித் அசலங்கா ஒரு ரன்னிலும், அதிரடியாக விளையாட முயன்ற தனஞ்செயா டி சில்வா 25 ரன்களுக்கும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். 

அதேசமயம் மறுப்பக்கம் பொறுப்பான ஆட்டத்தை வெள்ப்படுத்தி வந்த சதீரா சமரவிக்ரமா 82 பந்துகளில் தனது முதல் சர்வதேச ஒருநாள் சதத்தைப் பதிவுசெய்ததுடன், உலகக்கோப்பை போட்டியிலும் சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் கேப்டன் தஷுன் ஷனகா 12 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து 11 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 108 ரன்களைச் சேர்த்த நிலையில் சதீராவும் தனது விக்கெட்டை இழந்தார்.

இதனால் 50 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 344 ரன்களை மட்டுமே எடுத்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் ஹசன் அலி 4 விக்கெட்டுகளையும், ஹாரிஸ் ராவுஃப் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு இமாம் உல் ஹக் - அப்துல்லா ஷஃபீக் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இமாம் உல் ஹக் 12 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் பாபர் ஆசாமும் 10 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் இணைந்த அப்துல்லா ஷஃபிக் - முகமது ரிஸ்வான் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தனர்.

இதில் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் இலங்கை அணியின் பந்துவீச்சை பாரபட்சமின்றி வெளுத்துத்தள்ளினர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அப்துல்லா ஷஃபிக் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதேசமயம் இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் சதமடித்த முதல் பாகிஸ்தான் வீரர் எனும் சாதனையையும் படைத்தார்.  

அதன்பின் 10 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 113 ரன்கள் எடுத்த நிலையில் அப்துல்லா ஷஃபிக் விக்கெட்டை இழந்தார். அதேசமயம் மறுபக்கம் தசைப்பிடிப்பால் அவதிப்பட்டு விளையாடி வந்த முகமது ரிஸ்வானும் தனது காயத்தையும் பொறுத்படுத்தாமல் அதிரடியாக விளையாடி தனது சதத்தைப் பதிவுசெய்து அசத்தியதுடன் அணியின் வெற்றி வாய்ப்பையும் உறுதிப்படுத்தினார். 

இதன்மூலம் பாகிஸ்தான் அணி 48.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த முகமது ரிஸ்வான் 8 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 130 ரன்களை விளாசி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை