PAK vs SL: 16 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் ஷாஹீன் அஃப்ரிடி!
பாகிஸ்தான் அணி அடுத்த மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி ஜூலை 3ஆம் தேதி பாகிஸ்தான் அணியில் கராச்சியில் ஒன்றிணைந்து, ஜூலை 9ஆம் தேதி இலங்கைக்கு புறப்படவுள்ளது.
இந்நிலையில் இத்தொடருக்கான பாபர் ஆசாம் தலைமையில் 16 பேர் கொண்ட பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. அதன்படி இந்த அணியில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அஃப்ரிடி நீண்ட நாள்களுக்கு பிறகு டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ளார்.
அதேசமயம் அறிமுக வீரர்களாக பேட்டர் முகமது ஹுரைரா மற்றும் ஆல்-ரவுண்டர் அமீர் ஜமாலுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் நட்சத்திர வீரர்களான முகமது ரிஸ்வான், அப்துல்லா ஷபீக், இமாம் உல் ஹக், ஹசன் அலி மற்றும் நசீம் ஷா ஆகியோரும் அணியில் இடம்பிடித்துள்ளனர்.
மேலும் இத்தொடரானது 2023/25ஆம் ஆண்டிற்கான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடராகவும் நடைபெறவுள்ளதால இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளது.
பாகிஸ்தான் அணி: பாபர் ஆசாம் (கே), முகமது ரிஸ்வான், அமீர் ஜமால், அப்துல்லா ஷபீக், அப்ரார் அகமது, ஹசன் அலி, இமாம்-உல்-ஹக், முகமது ஹுரைரா, முகமது நவாஸ், நசீம் ஷா, நௌமன் அலி, சல்மான் அலி ஆகா, சர்பராஸ் அகமது, சவுத் ஷகீல், ஷாஹீன் அஃப்ரிடி மற்றும் ஷான் மசூத்.