சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய ஷாஹீன் அஃப்ரிடி!

Updated: Wed, Dec 11 2024 10:01 IST
Image Source: Google

தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி டர்பனில் நேற்று நடைபெற்று முடிந்தது. இப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியானது 11 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது. 

அதன்படி, நேற்று நடைபெற்ற் இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணியில் நட்சத்திர வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தாலும், டேவிட் மில்லர், ஜார்ஜ் லிண்டே இணை அதிரடியாக விளையாடியதன் காரணமாக 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்களைச் சேர்த்தது. இதில் டேவிட் மில்லர் 82 ரன்களையும், ஜார்ஜ் லிண்டே 48 ரன்களையும் சேர்க்க, பாகிஸ்தான் தரப்பில் ஷாஹீன் அஃப்ரிடி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இதனையடுத்து சவாலான இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணியில் கேப்டன் முகமது ரிஸ்வான் அரைசதம் கடந்ததுடன் இறுதிவரை போராடி 71 ரன்களில் விக்கெட்டை இழந்த நிலையில் மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்களைச் சேர்த்தது. தென் ஆப்பிரிக்க தரப்பில் ஜார்ஜ் லிண்டே 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இந்நிலையில் இப்போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வியைத் தழுவினாலும் அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹின் அஃப்ரிடி சில சாதனைகளை படைத்துள்ளார். அதன்படி இப்போட்டியில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் ஷாஹீன் அஃப்ரிடி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது 100ஆவது விக்கெட்டை பூர்த்தி செய்தார். இதன் மூலம் பாகிஸ்தான் அணிக்காக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை கைப்பற்றிய மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர் எனும் சாதனையை படைத்துள்ளார்.

இதற்கு முன் பாகிஸ்தான் அணிக்காக ஹரிஸ் ரவுப் மற்றும் ஷதாப் கான் ஆகியோர் மட்டுமே இந்த சாதனையை செய்திருந்த நிலையில் தற்போது ஷாஹீன் அஃப்ரிடியும் அவர்களுடன் இணைந்துள்ளார். இதில் ஹாரிஸ் ராவுஃப் 78 போட்டிகளில் விளையாடி 110 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்திலும், ஷதாப் கான் 104 போட்டிகளில் 107 விக்கெட்டுகளையும், ஷாஹீன் அஃப்ரிடி 74 போட்டிகளில் 100 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர். மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணிக்காக மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் 100 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் வீரர் எனும் வரலாற்று சாதனையையும் ஷாஹீன் அஃப்ரிடி படைத்துள்ளார். 

இதுதவிர்த்து, ஷாஹீன் அஃப்ரிடி இப்போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம்  தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 போட்டியில் அதிக விக்கெட் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். முன்னதாக ​​இந்த பட்டியலில் தென் அப்பிரிக்க அணியின் முன்னாள் ஜாம்பவான் டேல் ஸ்டெயின் பாகிஸ்தானுக்கு எதிராக 7 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 12 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் இருந்தார். 

Also Read: Funding To Save Test Cricket

ஆனால் தற்சாமயம் ஷாஹீன் அஃப்ரிடி 11 போட்டிகளில் விளையாடி 13 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன் முதலிடத்தையும் பிடித்து அசத்தியுள்ளார். மேலும் ஒட்டுமொத்தமாக இவ்விரு அணிகளுக்கும் இடையேயான டி20 போட்டியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பாட்டியலில் தென் ஆப்பிரிகாவின் தப்ரைஸ் ஷம்ஸியையும் ஷாஹீன் அஃப்ரிடி சமன் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை