உலகெங்கிலும் நடைபெற்று வரும் கிரிக்கெட் லீக் தொடர்கள் அமெரிக்காவையும் விட்டு வைக்கவில்லை. தற்போது அமெரிக்காவிலும் கிரிக்கெட்டின் அலை வீசி வருகிறது. 2024 ஆம் வருடத்திற்கான டி20 உலக கோப்பை போட்டிகள் அமெரிக்காவில் நடைபெற உள்ள நிலையில் பல்வேறு விதமான டி20 மற்றும் டி10 கிரிக்கெட் போட்டிகள் அங்கு நடத்தப்பட்டு வருகின்றன.

Advertisement

சமீபத்தில் தான் மேஜர் லீக் டி20 தொடர் அமெரிக்காவில் நடைபெற்றது . இதில் மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணி கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்களைக் கொண்டு யூ எஸ் மாஸ்டர் லீ கிரிக்கெட் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. ஆறு அணிகள் கலந்து கொள்ளும் இந்த போட்டி தொடரானது கடந்த சில தினங்களுக்கு முன்பு அமெரிக்காவில் தொடங்கியது. 

Advertisement

இதில் நேற்று நடைபெற்ற போட்டியில் கௌதம் கம்பீர் தலைமையிலான நியூஜெர்ஸி லெஜண்ட்ஸ் அணியும் மிஸ்பா உல் ஹக் தலைமையிலான நியூயார்க் வாரியர்ஸ்அணியும் மோதின. இந்தப் போட்டி மலையின் காரணமாக 5 அவர்களை கொண்டதாக நடத்தப்பட்டது. இதில் டாஸ் வென்று முதலில் விளையாடிய நியூயார்க் வாரியர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட ஐந்து ஓவர்களில் மிகச் சிறப்பாக விளையாடி 84 ரன்கள் எடுத்து இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்தது.

அந்த அணிக்காக பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் மற்றும் கேப்டன் ஷாஹித் அஃப்ரிதி சிறப்பாக விளையாடிய 12 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 37 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இவருக்கு உறுதுணையாக நின்று விளையாடிய கம்ரான் அக்மல் 12 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 27 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். நியூஜெர்சி அணிக்காக லியாம் பிளங்கட் சிறப்பாக பந்து வீசி இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்

இதனைத் தொடர்ந்து ஐந்து ஓவர்களில் 85 ரங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூ ஜெர்சி அணியினர் மிகச் சிறப்பாக விளையாடி 4.4 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 90 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றனர். நியூ ஜெர்சி அணிக்கு தொடக்க வீரராக களம் இறங்கிய ஜெஸ்ஸி ரைடர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுதி தனது அணிக்கு சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தார். இவரது அதிரடியால் இரண்டு ஓவர்களிலேயே விக்கெட் இழப்பின்றி 44 ரன்கள் எட்டியது நியூஜெர்சி அணி.

இதனைத் தொடர்ந்து ஸ்கோர் 49 ஆக இருந்தபோது 12 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் மூன்று பவுண்டரிகளுடன் 38 ரன்கள் அதிரடியாக விளாசிய ரைடர், ஜெரோம் டைலரின் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். இவரைத் தொடர்ந்து விளையாடி வந்த பார்ன்வெல் தனது பங்கிற்கு நான்கு சிக்ஸர்களை விலாசினார். இதன் காரணமாக இறுதி ஓவரில் எட்டு ரன்கள் மட்டுமே எடுக்க வேண்டும் என்ற நிலை உருவானது .

Advertisement

 

இந்நிலையில் யூசுப் பதான் இமாலய சிக்சர் உடன் போட்டியை சிறப்பாக முடித்து வைத்தார். இரண்டு பந்துகள் மீதம் இருக்கும் நிலையில் நியூ ஜெர்சி அணி வெற்றி பெற்றது . யூசுப் பதான் 6 பந்துகளில் 2 சிக்ஸர்களுடன் 16 ரன்களிலும் பார்ன்வெல் 10 பந்துகளில் 4 சிக்ஸர்களின் உதவியுடன் 28 ரன்களிலும் ஆட்டம் விளக்காமல் இருந்தனர். அதிரடியாக விளையாடிய ஜெஸ்ஸி ரைடர் இந்த போட்டியில் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News