ஷாருக் கான் சிக்சரை கண்டுகளித்த எம்.எஸ். தோனி!

Updated: Mon, Nov 22 2021 17:37 IST
Shahrukh Khan does an MS Dhoni (Image Source: Google)

சையத் முஷ்டாக் அலி கோப்பைப் தொடரின் இறுதிச்சுற்றில் கர்நாடகத்தை வீழ்த்தி தமிழக அணி சாம்பியன் ஆகியுள்ளது. கடைசிப் பந்தில் சிக்ஸர் அடித்து தமிழக அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தார் ஷாருக் கான்.

இதன்மூலம் சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் தமிழ்நாடு அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று, இத்தொடரில் அதிகமுறை சாம்பியன் பட்டம் வென்ற அணி என்ற புகழைப் பெற்றது. 

மேலும் தொடர்ச்சியாக மூன்று முறை இறுதிப்போட்டிக்குள் நுழைந்து, அதில் இரண்டு முறை கோப்பையைக் கைப்பற்றியுள்ளது. 

அதிலும் இப்போட்டியின் கடைசி ஓவர்சில் 16 ரன்கள் எடுக்க வேண்டிய இக்காட்டான சூழலில், முதல் பந்தில் சாய் கிஷோர் ஒரு பவுண்டரி அடித்தார். ஜெயின் இரு வைட் பந்துகளை வீசினார். இதனால் கடைசிப் பந்தில் வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்டன. பரபரப்பான அந்தத் தருணத்தில் ஷாருக் கான் அற்புதமான சிக்ஸர் அடித்து தமிழ்நாடு அணிக்கு வெற்றியை வழங்கினார்.

 

Also Read: T20 World Cup 2021

சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியின் இறுதி ஆட்டத்தைத் தொலைக்காட்சி வழியாகக் கண்டுகளித்தார் சிஎஸ்கே கேப்டன் தோனி. இதன் புகைப்படத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இப்புகைப்படம் தற்போது சமூக வலைதளங்கில் வைரலாகியுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை