கான்பூர் டெஸ்டில் ஷாகிப் அல் ஹசன் விளையாடுவது சந்தேகம்!

Updated: Mon, Sep 23 2024 21:17 IST
Image Source: Google

இந்திய அணி அடுத்ததாக வங்கதேச அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. 

இப்போட்டியில்  இந்திய அணியானது 280 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தியதுடன், இந்த டெஸ்ட் தொடரிலும் 1-0 என்ற கணக்கில் முன்னிலையும் வகித்து வருகிறது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது கான்பூரில் உள்ள க்ரீன் பார்க் மைதானத்தில் எதிவரும் செப்டம்பர் 27ஆம் தேதி முதல் நடைபெறவுளது.

இந்த போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றாலோ அல்லது போட்டியை டிராவில் முடித்தாலும் கூட இந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றி அசத்தும். அதேசமயம் வங்கதேச அணியானது தொடர் இழப்பை தடுப்பதற்காக கடுமையாக போராடும் என்பதல் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இதற்காக தற்சமயம் இவ்விரு அணிகளும் தீவிரமான பயிற்சியிலும் ஈடுபட்டுவருகின்றன.

இந்நிலையில் வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியையும் பிசிசிஐ நேற்றைய தினம் அறிவித்தது. அதன்படி இந்த போட்டிக்கான இந்திய அணியில் எந்த மாற்றங்களும் செய்யப்படாமல் முதல் டெஸ்ட்டில் விளையாடிய அனைத்து வீரர்களும் இடம்பிடித்துள்ளனர். அதேசமயம் வங்கதேச அணியிலும் பெரிதளவில் மாற்றங்கள் ஏதும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணியின் நட்சத்திர விரர் ஷாகிப் அல் ஹசன் விளையாடுவது சந்தேகம் என்ற தகவல் வெளியாகியுள்ளன. அதன்படி சென்னையில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியின் போது இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித்  பும்ரா பந்துவீச்சில் ஷாகிப் அல் ஹசன் காயமடைந்தார். இதனால் அவர் இப்போட்டியில் அதிகம் பந்துவீசவும் வரவில்லை. 

இதனையடுத்து ஷாகிப் அல் ஹசன தனது காயத்திற்காக சிகிச்சைப் பெற்று வருவதாகவும், அவரது காயத்தை மருத்துவ குழு கண்காணித்து வருவதாகவும், அவர் முழுமையான உடற்தகுதியுடன் இருந்தால் மட்டுமே கான்பூர் டெஸ்டில் விளையாட முடியும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாகவே வங்கதேச அணியானது பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. 

இந்திய அணி: ரோஹித் சர்மா (கே), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், சர்ஃப்ராஸ் கான், ரிஷப் பந்த், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஆகாஷ் தீப் , ஜஸ்பிரித் பும்ரா, யாஷ் தயாள்.

Also Read: Funding To Save Test Cricket

வங்கதேச டெஸ்ட் அணி: நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கேப்டன்), ஸாத்மன் இஸ்லாம், ஜாகிர் ஹாசன், மோமினுல் ஹேக், முஸ்ஃபிக்கூர் ரஹீம், ஷகிப் அல் ஹசன், லிட்டன் தாஸ், மெஹிதி ஹாசன் மிராஸ், ஜேக்கர் அலி, தஸ்கின் அகமது, ஹசன் மஹ்முத், நஹித் ராணா, தைஜுல் இஸ்லாம், மஹ்முதுல் ஹாசன் ஜாய், நயீம் ஹசன், காலித் அகமது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை