காயத்திலிருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன் - முகமது ஷமி!

Updated: Sat, Dec 03 2022 16:28 IST
Shami tweets after being sidelined from Bangladesh ODIs (Image Source: Google)

இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாடுவதற்காக வங்கதேசம் சென்றுள்ளது. இந்தியா -வங்காளதேச அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது. நியூசிலாந்து தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்ட கேப்டன் ரோஹித் சர்மா , முன்னாள் கேப்டன் விராட் கோலி , கேஎல் ராகுல் ஆகியோர் அணிக்கு திரும்பி உள்ளனர்.

இஷான் கிஷன், முகமது சிராஜ், ரஜத் படிதார், ராகுல் திரிபாதி , குல்தீப் சென் உள்ளிட்டோரும் இந்த தொடரில் விளையாடுகிறார்கள். நியூசிலாந்து தொடரில் விளையாடிய சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, சஞ்சு சாம்சன், சாஹல் உள்ளிட்டோர் வங்காளதேச தொடரில் இடம் பெறவில்லை.

இந்நிலையில், வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து வேகப்பந்து வீரர் முகமது ஷமி இந்த தொடரில் விலகி உள்ளார். அவருக்கு கையில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகியுள்ளார். காயம் அடைந்த முகமது ஷமிக்கு பதிலாக இந்திய வேகப்பந்து வீச்சு புயல் உம்ரான் மாலிக் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து முகமது ஷமி தனது டுவிட்டர் பக்கத்தில், “பொதுவாக காயங்கள் ஒவ்வொரு தருணத்தையும் பாராட்ட கற்றுக்கொடுக்கின்றன. என் வாழ்க்கை முழுவதும் எனக்கு பல காயம் ஏற்பட்டது. அது தாழ்மையானது. இது உங்களுக்கு முன்னோக்கை தருகிறது. எத்தனை முறை நான் காயமடைந்தாலும், அந்த காயத்திலிருந்து நான் கற்றுக்கொண்டேன், இன்னும் வலுவாக திரும்பி வந்தேன்” என்று பதிவிட்டுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை