இங்கிலாந்து இந்த இரு மாற்றாங்கள் வேண்டும் - ஷேன் வார்னே!
இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் டிரா ஆன நிலையில், 2ஆவது டெஸ்ட்டில் இந்திய அணியும், 3ஆவது டெஸ்ட்டில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்றன. இதனால் இத்தொடர் 1-1 என்ற கணக்கில் சமனடைந்துள்ளது.
தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி 2 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெறும் முனைப்பில் இரு அணிகளும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், இந்திய அணியின் பிளேயிங் லெவன் காம்பினேஷன் குறித்தே முன்னால் வீரர்கள் பேசிக்கொண்டிருக்கும் நிலையில், ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஷேன் வார்னே இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் குறித்து பேசியுள்ளார்.
இதுகுறித்து பேசிய வார்னே, “இங்கிலாந்து அணி சாம் கரனை நீக்கிவிட்டு, வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் அல்லது ஜேக் லீச் - பார்கின்சன் ஆகிய 2 ஸ்பின்னர்களில் ஒருவரை சேர்க்க வேண்டும். 3ஆம் வரிசையில் டேவிட் மலான் நன்றாக ஆடுகிறார். ஆனால் ஜாக் கிரௌலியும் மிகத்திறமையான வீரர். அவரை அணியில் சேர்த்து ஓபனிங்கில் இறக்கலாம்” என்று பரிந்துரைத்துள்ளார்.
Also Read: சிட்னி சிக்சர்ஸில் மீண்டும் ஓராண்டு ஒப்பந்தமான பிராத்வைட்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கும் இடையேயான நான்கவாது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் செப்டம்பர் 2ஆம் தேதி நடைபெறுகிறது.