அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் 16ஆவது சீசனுக்கான முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ளது. ஐபிஎல் 16ஆவது சீசனுக்கு முன், டிசம்பர் 23ஆம் தேதி கொச்சியில் மினி ஏலம் நடைபெறவுள்ளது. இந்த மினி ஏலத்திற்கு முன்பாக ஒவ்வொரு அணியும் தாங்கள் தக்கவைக்கும் வீரர்களின் பெயர் பட்டியலை இன்றுக்குள் சமர்பிக்க வேண்டும் என ஐபிஎல் நிர்வாகம் கூறியிருந்தது.

Advertisement

அதற்கான வேலைகளை அணி நிர்வாகங்கள் தீவிரமாக செய்து வருகின்றன. அந்த வகையில் கடந்த சீசனில் டெல்லி அணிக்காக களம் இறங்கிய ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்கூரை அந்த அணி நிர்வாகம் கொல்கத்தா அணிக்கு டிரேடிங் செய்துள்ளது. அவருக்காக அந்த அணியில் இருந்து ஆல்ரவுண்டர் அமான் கானை டெல்லி அணி நிர்வாகம் வாங்கியுள்ளது.

Advertisement

ஷர்துல் தாக்கூரை டெல்லி அணி கடந்த சீசனில் 10.75 கோடி ரூபாய் கொடுத்து வாங்கினர். அவர் அந்த அணிக்காக 14 போட்டிகளில் விளையாடி 15 விக்கெட்டும், 120 ரன்களும் அடித்திருந்தார். கொல்கத்தா அணி ஏற்கனவே குஜராத் அணியிடம் இருந்து வேகப்பந்து வீச்சாளர் லாக்கி பெர்குசனையும், ஆஃப்கானிஸ்தான் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் குர்பாஸையும் டிரேடிங் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News