உள்ளூர், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த ஷிகர் தவான் - ரசிகர்கள் அதிர்ச்சி!

Updated: Sat, Aug 24 2024 08:30 IST
Image Source: Google

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரராக அறியப்பட்டவர் ஷிகர் தவான். கடந்த 2010ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான ஷிகர் தவான் ஐசிசி தொடர்களீல் இந்திய அணிக்கு மிக்கபெரும் பலமாக இருந்து வந்தார். ஆனால் சமீப காலமாக அவர் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படாமல் ஓரங்கட்டப்பட்டார். கடைசியாக கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்ட அவர், அதன்பின் எந்தவொரு சர்வதேச கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியிலும் தேர்வு செய்யப்படவில்லை.

அதிலும் குறிப்பாக கடந்தாண்டு இந்தியாவில் நடைபெற்ற ஐசிசி ஆடவர் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் ஷிகர் தவான் நிச்சயம் இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. பின்னர் இந்தாண்டு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வழிநடத்தி வந்த ஷிகர் தவான், அதன்பின் காயம் காரணமாக தொடரில் இருந்து பாதியிலேயே விலகினார். இந்நிலையில், இந்திய அணியின் மூத்த வீரரான ஷிகர் தவான் சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

அதன்படி தற்போது 38 வயதை எட்டியுள்ள ஷிகர் தவான், இன்று (ஆகஸ்ட் 24) காலை தனது சமூக ஊடக தளபக்கத்தில் ஒரு காணொளியைப் பதிவுசெய்து தனது ஓய்வு முடிவினை அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளார். இவர் சர்வதேச மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை பெற்றாலும், மேற்கொண்டு ஐபிஎல் தொடரில் விளையாட ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்திய அணிக்காக கடந்த 2010ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிற்காக அறிமுகமான இவர், இதுநாள் வரை 34 டெஸ்ட், 167 ஒருநாள் மற்றும் 68 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

அந்தவகையில் 34 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அவர் 58 இன்னிங்ஸ்களில் 7 பவுண்டரி, 5 அரைசதங்கள் என 2315 ரன்களையும், 167 ஒருநாள் போட்டிகளில் 164 இன்னிங்ஸ்களில் விளையாடிய தவான், 17 சதங்கள், 39 அரைசதங்கள் என 7,436 ரன்களை குவித்துள்ளார். மேற்கொண்டு 68 டி20 போட்டிகளில் 11 அரைசதங்களுடன் 1,392 ரன்களைக் குவித்துள்ளார். இதுதவிர்த்து ஐபிஎல் தொடரில் இதுநாள் வரை 222 போட்டிகளில் விளையாடியுள்ள தவான் 2 சதம் மற்றும் 51 அரைசதங்களுடன் 6,769 ரன்களைச் சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஷிகர் தவானிற்கு அவரது ரசிகர்கள் வாழ்த்து செய்தியை தெரிவித்து வருகின்றனர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை