IND vs SA: ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி ஒருநாள் அணி அறிவிப்பு!

Updated: Sun, Oct 02 2022 19:01 IST
Image Source: Google

இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது. டி20 தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த அணி, உலக கோப்பை தொடரில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியா செல்ல உள்ளது.

இதனால், ஒருநாள் தொடரில் ஷிகர் தவான் தலைமையில் முற்றிலும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க பிசிசிஐ முடிவு எடுத்துள்ளது. அதன்படி தென் ஆப்பிரிக்க ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. 

இந்த அணிக்கு ஷிகர் தவான் கேப்டனாகவும், ஸ்ரேயாஸ் ஐயர் துணைக்கேப்டனாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதேசமயம் ஐபிஎல் மற்றும் உள்ளூர் போட்டிகளில் கலக்கிய இளம் வீரர்களுக்கும் இத்தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த அணியில் இடம்பெற்றுள்ள ஐபிஎல் வீரர்கள் குறித்து முதலில் காணலாம். ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக விளையாடிய சதம் விளாசிய ரஜத் பட்டிதார், அண்மையில் நடைபெற்ற நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான தொடரில் கலக்கி வருகிறார்.  ரஜத் பட்டிதார் முதல் முறையாக இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளார். 

மற்றொரு ஆர்சிபி வீரரான ஷாபாஸ் அகமது, இந்திய அணியின் ஆல்ரவுண்டராக இடம்பெற்றுள்ளார். அக்சர் பட்டேல் உள்ளிட்டோர் டி20 உலக கோப்பைக்காக ஆஸ்திரேலியா சென்றுள்ள நிலையில், ஷாபாஸ் அகமதுக்கு இந்திய ஒருநாள் அணியில் இடம் உறுதி என்று கருதப்படுகிறது. இதன் மூலம் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் தனது திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

அதேபோல் டி20 உலகக்கோப்பை தொடரில் இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சனும் இந்த ஒருநாள் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் இஷான் கிஷான், சுப்மன் கில், தீபக் சஹார், முகமது சிராஜ் ஆகியோருக்கும் இந்த அணியில் இடமளிக்கப்பட்டுள்ளது. 

இந்திய ஒருநாள் அணி: இந்திய ஒருநாள் அணி: ஷிகர் தவான் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர் (துணை கேப்டன்), ரஜத் படிதார், ராகுல் திரிபாதி, இஷான் கிஷான் , சஞ்சு சாம்சன், ஷாபாஸ் அகமது, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், ரவி பிஷ்னோய், முகேஷ் குமார், அவேஷ் கான், முகமது. சிராஜ், தீபக் சாஹர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை