ஐபிஎல் 2023 சீசன் முதல் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஷிகர் தவான் செயல்படுவார் என அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. கடந்த 2022 சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு மயங்க் அகர்வால் தலைமை வகித்தார். மேலும் கடந்த சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணி ஆறாவது இடம் வகித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

ரோஹித் சர்மா அணியில் இல்லாத போது, ஷிகர் தவான் இந்திய ஒருநாள் அணிக்கு தலைமை வகித்து வெற்றிகரமாக செயல்பட்டார். மேலும் நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்ய உள்ள இந்திய அணிக்கும் தவான் கேப்டனாக செயல்பட உள்ளார். கடந்த 2022 ஐபிஎல் சீசனில் பஞ்சாப் அணிக்காக அதிக ரன்கள் குவித்தவர் பட்டியலில் ஷிகர் தவான்(460 ரன்கள்) முதலிடத்தில் உள்ளார்.

Advertisement

பஞ்சாப் அணி நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில் புதிய கேப்டனாக ஷிகர் தவான் நியமிக்கப்பட்டுள்ளதை பகிர்ந்துள்ளது. பஞ்சாப் அணியின் 14 ஆவது கேப்டன் ஷிகர் தவான் என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News