ZIM vs IND: காயம் காரணமாக தொடரிலிருந்து விலகிய நிதீஷ் ரெட்டி; ஷிவம் தூபே சேர்ப்பு!

Updated: Wed, Jun 26 2024 21:27 IST
ZIM vs IND: காயம் காரணமாக தொடரிலிருந்து விலகிய நிதீஷ் ரெட்டி; ஷிவம் தூபே சேர்ப்பு! (Image Source: Google)

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வருகிறது. இந்த உலகக் கோப்பைக்கு தொடருக்கு பிறகு, இந்திய கிரிக்கெட் அணியானது ஜூலை 5 முதல் ஜிம்பாப்வேக்கு எதிராக சர்வதேச டி20 தொடரில் விளையாட உள்ளது. இத்தொடருக்கான இந்திய அணியில் ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில், சமீபத்தில் இத்தொடருக்கான இந்திய அணியும் அறிவிக்கப்பட்டது.

அதன்படி ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கொண்டு சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர், ஆவேஷ் கான், கலீத் அஹ்மத், முகேஷ் குமார் ஆகியோருடன், நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ரியான் பராக், அபிஷேக் சர்மா, நிதீஷ் ரெட்டி, துஷார் தேஷ்பாண்டா, துருவ் ஜுரெல் உள்ளிட்ட அறிமுக வீரர்களுக்கும் இத்தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில் காயம் காரணமாக இத்தொடரில் இடம்பிடித்திருந்த இந்திய அணியின் அறிமுக வீரர் நிதீஷ் ரெட்டி விலகியுள்ளதாக பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. மேற்கொண்டு அவருக்கான மாற்று வீரராக ஆல் ரவுண்டர் ஷிவம் தூபே ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் பிசிசிஐ அறிவித்துள்ளது.  

இந்திய அணி: ஷுப்மான் கில் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், அபிஷேக் சர்மா, ரின்கு சிங், சஞ்சு சாம்சன், துருவ் ஜூரல், ஷிவம் தூபே, ரியான் பராக், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அவேஷ் கான், கலீல் அகமது, முகேஷ் குமார், துஷார் தேஷ்பாண்டே.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை