இந்தியா வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனாகா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

Advertisement

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு தீபக் ஹூடா 41 ரன்களும், அக்‌ஷர் பட்டேல் 31 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டை இழந்த இந்திய அணி 162 ரன்கள் எடுத்தது. இதன்பின் 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய இலங்கை அணி அறிமுக வீரர் ஷிவம் மாவி மற்றும் அதிவேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் ஆகியோரது பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.

Advertisement

இதனால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 160 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக சிவம் மாவி 4 விக்கெட்டுகளையும், உம்ரன் மாலிக் மற்றும் ஹர்சல் பட்டேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது.

இந்நிலையில் இப்போட்டியில் அறிமுகமாகி 4 விக்கெட்டுகளை வீழ்த்திய ஷிவம் மாவி இந்திய டி20 கிரிக்கெட் வரலாற்றில் சாதனைப் பட்டியளிலும் இணைந்துள்ளார். அச்சாதனை யாதெனில் இந்திய டி20 அணிக்காக அறிமுக போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய 3ஆவது இந்திய வீரர் மற்றும் இந்திய மண்ணில் அறிமுகம் டி20 போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் எனும் சாதனைகளைப் படைத்து அசத்தியுள்ளார். 

முன்னதாக பரிந்தர் ஸ்ரன், பிரக்யான் ஓஜா ஆகியோர் இந்திய அணிக்காக அறிமுக டி20 கிரிக்கெட்டில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளனர். இதில் ஸ்ரன் தனது முதல் போட்டியில் 10 ரன்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News