பாபர் ஆசாம் மூன்றாம் இடத்தில் தான் விளையாட வேண்டும் - ஷோயப் மாலிக்

Updated: Fri, May 31 2024 15:45 IST
Image Source: Google

டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த பாகிஸ்தான் அணியானது 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வந்தது. இத்தொடரின் முடிவில் முதல் மற்றும் மூன்றாவது போட்டியானது மழையால் கைவிடப்பட்டும், இரண்டாவது மற்றும் நான்காவது டி20 போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றும் அசத்தியது. இதன்மூலம் நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடரை இங்கிலாந்து அணியானது 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. 

அதிலும் குறிப்பாக இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் அபாரமான தொடக்கத்தைப் பெற்ற பாகிஸ்தான் அணியானது, அதன்பின் மளமளவென விக்கெட்டுகளை இழந்து போதிய ரன்களைச் சேர்க்காததே தோல்விக்கு மிகமுக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அதிலும் உலகக்கோப்பை தொடர் நெருங்கும் சூழ்நிலையில் பாகிஸ்தான் அணி அடுத்தடுத்த போட்டிகளில் தோல்வியைச் சந்தித்துள்ளது பெரும் விமர்சனங்களுக்கும் வழிவகுத்துள்ளது. அதிலும் குறிப்பாக அணியின் மிடில் ஆர்டர் பேட்டர்கள் மீதான விமர்சனங்கள் தான் அதிகரித்துள்ளன. 

இதனால் உலகக்கோப்பை தொடருக்குள் பாகிஸ்தான் அணி தங்களிடையே உள்ள பிரச்சனைகளை சரிசெய்தால் மட்டுமே வெற்றியை பெறமுடியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், வரவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசாம் மூன்றாம் இடத்தில் தான் களமிறங்க வேண்டும் என்று அந்த அணியின் முன்னாள் வீரர் ஷோயப் மாலிக் அறிவுறுத்தியுள்ளார். 

 

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், இது ஒரு கடினமான தொடர். ஆனால் நினைவில் கொள்ளுங்கள், நாம் முன்பு கடினமான இடத்தில் இருந்து தற்போது முன்னேறியுள்ளோம். அதேசயம் பாபர் ஆசாம் மூன்றாம் இடத்தில் களமிறங்க வேண்டும். ஏனெனில் மிடில் ஓவர்களில் ஸ்டிரைக்கை ரொட்டேட் செய்யும் பேட்டர் நிச்சயம் தேவை. அதற்கான சிறந்த தேர்வு பாபர் ஆசாம் தான். ஏனெனில் அவரின் வழிகாட்டுதலுக்கு கீழ் மிடில் ஆர்ட்ர் பேட்டர்களால் மேற்கொண்டு சிறப்பாக விளையாட முடியும்” என்று தெரிவித்துள்ளார். 

பாகிஸ்தான் அணி: பாபர் ஆசாம் (கேப்டன்), அப்ரார் அகமது, அசம் கான், ஃபகார் ஸமான், ஹாரிஸ் ரவுஃப், இஃப்திகார் அகமது, இமாத் வாசிம், முகமது அப்பாஸ் அஃப்ரிடி, முகமது அமீர், முகமது ரிஸ்வான், நசீம் ஷா, சைம் அயூப், ஷதாப் கான், ஷஹீன் ஷா அஃப்ரிடி, உஸ்மான் கான்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை