இந்திய டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்ஸா மற்றும் பாகிஸ்தான் ஜாம்பவான் கிரிக்கெட் வீரர் ஷோயப் மாலிக் ஆகிய இருவரும் கடந்த 2010ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இந்தியா - பாகிஸ்தான் நாடுகளின் அடையாளங்களில் ஒருவராக திகழ்ந்த விளையாட்டு வீரரும் வீராங்கனையும் திருமணம் செய்துகொண்டது பெரும் பரபரப்பாக இருந்தது. கடந்த 2018ஆம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது.

Advertisement

இந்நிலையில், அண்மையில் சானியா மிர்ஸாவின் இன்ஸ்டாகிராம் பதிவு, சானியா - ஷோயப் மாலிக் ஜோடியின் பிரிவை உணர்த்தும் சமிக்ஞையாக இருந்தது. “உடைந்த இதயங்கள் எங்கே செல்கின்றன? அல்லாவைக் காண” என்று பதிவிட்டிருந்தார். ஷோயப் மாலிக்கை பிரிந்திருக்கும் சானியா மிர்சாவின் இந்த பதிவு விவாகரத்து சர்ச்சையை எழுப்பியது.

Advertisement

சானியா மிர்ஸா - ஷோயப் மாலிக் தம்பதி அதிகாரப்பூர்வமாக விவாகரத்து செய்து பிரிந்துவிட்டதாகவும், அவர்களது மகனுக்கு பெற்றோராக இருப்பார்கள் என்றும் பாகிஸ்தான் ஊடகம் தெரிவித்திருந்தது. ஷோயப் மாலிக் பாகிஸ்தானின் பிரபல நடிகையுடன் திருமணத்தை தாண்டிய உறவில் இருப்பதை சானியா மிர்சா கண்டுபிடித்துவிட்டதாகவும், அதனால் தான் பிரிந்துவிட்டதாகவும் தகவல் வெளியானது. 

பாகிஸ்தானின் பிரபல மாடலும் நடிகையுமான ஆயிஷா ஓமருடன் கடந்த ஆண்டு நெருக்கமாக ஒரு ஃபோட்டோஷூட்டில் ஷோயப் மாலிக் கலந்துகொண்டார். அந்த ஃபோட்டோக்களில் ஷோயப் மாலிக்கும் ஆயிஷாவும் மிகவும் நெருக்கமாக இருந்தனர். அந்த ஃபோட்டோஷூட்டுக்கு பின்னர் இருவரும் திருமணத்தை தாண்டிய உறவில் இருப்பதாகவும், அது தெரிந்துதான் சானியா மிர்ஸா ஷோயப் மாலிக்கை பிரிந்துவிட்டதாகவும் தகவல் வெளியானது.

இந்த தகவல் இரு நாட்டு விளையாட்டு ரசிகர்களுக்கும் பெரும் வேதனையாக இருந்தது. இந்நிலையில், பாகிஸ்தான் தொலைகாட்சி ஒன்றில் மிர்ஸா - மாலிக் என்ற நிகழ்ச்சியை இருவரும் இணைந்து தொகுத்து வழங்கவுள்ளதாக தகவல் வெளியானது. சானியா மிர்ஸா - ஷோயப் மாலிக் ஜோடி விவாகரத்து பெற்றுவிட்டதாக தகவல் பரவிய நிலையில், இருவரும் இணைந்து தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளதாக வெளியான தகவல் ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

 

Advertisement

இந்நிலையில், இன்று 36ஆவது பிறந்தநாள் கொண்டாடும் சானியா மிர்சாவுக்கு ஷோயப் மாலிக் இன்ஸ்டாகிராமில் வாழ்த்து கூறியுள்ளார். இருவரும் இணைந்திருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட ஷோயப் மாலிக், பிறந்தநாள் வாழ்த்துக்கள் சானியா மிர்ஸா.. ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ வாழ்த்துக்கள். பிறந்தநாளான இன்று மகிழ்ந்திருக்குமாறு வாழ்த்தியுள்ளார். தற்போது இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News