சச்சினை விட கோலியே சிறந்தவர் - சோயப் அக்தர்!

Updated: Sun, Mar 05 2023 18:22 IST
Shoaib's Stunning Comparison Between Sachin & Kohli! (Image Source: Google)

இந்திய கிரிக்கெட் அணியில் பல்வேறு சாதனைகளைப் படைத்து உச்சத்தில் இருப்பவர் விராட் கோலி. கடந்த 15 ஆண்டுகளுக்கு மேல் இந்திய அணிக்காக விளையாடி வரும் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 25 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.

இந்த நிலையில் விராட் கோலி கடந்த செப்டம்பர் மாதம் முன்பு வரை ஃபார்மில் இல்லாமல் தடுமாறி வந்தார். ஆசியக் கோப்பையில் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான சதம் டி20 உலக கோப்பையில் அபார ஆட்டம் மற்றும் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் நான்கு போட்டிகளில் மூன்று சதம் என தன்னுடைய பழைய பார்ம்க்கு விராட் திரும்பியுள்ளார்.

எனினும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி இன்னும் தன்னுடைய பழைய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. கடந்த 10 இன்னிங்ஸில் ஒரு முறை கூட அவர் 50 ரன்கள் அடிக்கவில்லை. இந்த நிலையில் விராட் கோலி குறித்து முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பாராட்டுகளை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “ சச்சின் டெண்டுல்கர் தான் உலகத்திலே சிறந்த பேட்ஸ்மேன் என்று நான் நம்புகிறேன்

ஆனால் கேப்டனாக சச்சின் எதையும் சாதிக்கவில்லை. சொல்லப்போனால் கேப்டன் பதவியை வேண்டாம் என அவரே சென்று விட்டார். நான் என் நண்பர் ஒருவரிடம் விராட் கோலி குறித்து ஆலோசனை செய்து கொண்டிருந்தேன். விராட் கோலி கொஞ்சம் பார்மில் இல்லாமல் தடுமாறினார். ஆனால் அவர் தன்னுடைய மனதை பலப்படுத்திக் கொண்டு மீண்டும் கிரிக்கெட் களத்தில் ஜொலித்தார்.

அவருடைய மனது சுதந்திரமாக இருந்த போது டி20 உலக கோப்பை தொடரில் அவர்தான் ஆட்சி செய்தார். விராட் கோலி சாதனையை நீங்கள் பார்த்தாலே தெரியும். கிட்டத்தட்ட 40 சதம் அடித்திருக்கிறார். என்னை பார்க்கும் மக்கள் எல்லாம் நீங்கள் விராட் கோலியை வெகுவாக பாராட்டுகிறீர்கள் என சொல்கிறார்கள். 

நான் அவர்களிடம் திரும்பி கேட்பதெல்லாம் அவரை பாராட்டாமல் எப்படி இருக்க முடியும் என்பது தான். ஒரு காலத்தில் இந்தியா அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று வந்தது. அதற்கு காரணம் விராட் கோலியின் சதங்கள் தான்” என்று தெரிவித்துள்ளார்.
 
விராட் கோலி நடப்பு பார்டர் கவாஸ்கர் தொடரில் இதுவரை ஒரு அரை சதம் கூட அடிக்கவில்லை. இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்றால் அவர் பெரிய சதங்களை அடித்தால் தான் அது முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை