வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடிய ஸ்ரேயாஸ் ஐயர் - வைரல் காணொளி!

Updated: Sat, Sep 11 2021 16:13 IST
Shreyas Iyer and other Delhi Capitals players dance to Vaathi Coming in viral video (Image Source: Google)

கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும்19ஆம் தேதி தொடங்குகிறது. இதில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.

இதுவரை 29 லீக் ஆட்டங்கள் மட்டுமே நடைபெற்றுள்ள நிலையில் மீதம் 31 போட்டிகள் நடைபெற வேண்டியுள்ளது. மொத்தம் உள்ள 31 போட்டிகள் 27 நாட்களில் நடத்தி முடிக்கப்படவுள்ளது. 

இது ஒருபுறமிருக்க, டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் துபாயில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறது. தற்போது புள்ளிப்பட்டியலில் டெல்லி கேப்பிட்டல்ஸ் தான் முதலிடத்தில் இருக்கிறது. 

 

இந்நிலையில் அந்த அணியின் வீரர்கள் ஷ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்ட சிலர், நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் வரும் "வாத்தி கம்மிங்" பாடலுக்கு நடனமாடும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

இந்த வாத்தி கம்மிங் பாடல், மொழிகள் கடந்து பெரிய அளவும் ரீச் ஆனது. பலரும் இப்பாடலின் இசைக்கு நடனமாடி இணையதளங்களில் வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை