சுனில் கவாஸ்கரிடம் தொப்பியை வாங்க ஸ்ரேயாஸ் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும் : தினேஷ் கார்த்திக்

Updated: Thu, Nov 25 2021 12:50 IST
Shreyas Iyer blessed to receive Test cap from Sunil Gavaskar: Dinesh Karthik (Image Source: Google)

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து விளையாடி வருகிறது.

மேலும் இப்போட்டிக்கான இந்திய அணியில் அறிமுக வீரராக ஸ்ரேயாஸ் ஐயர் சேர்க்கப்பட்டுள்ளார். அதன்படி முன்னாள் ஜாம்பவானான சுனில் கவாஸ்கர் டெஸ்ட் போட்டிக்கான தொப்பியை ஸ்ரேயாஸிடம் வழங்கி அவரை அறிமுகப்படுத்தி வைத்தார். 

இந்நிலையில், சுனில் கவாஸ்கரிடம் தொப்பியை வாங்க ஸ்ரேயாஸ் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும் என்று தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். 

 

இதுகுறித்து தினேஷ் கார்த்திக் தனது ட்விட்டர் பதிவில், “இந்தியா கண்டிராத தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவரிடமிருந்து இந்த அற்புதமான கவுரவத்தைப் பெறுவதற்கு ஸ்ரேயாஸ் ஐயர் அதிர்ஷ்டம் செய்திக்க வேண்டும். நீங்கள் முதல்தர கிரிக்கெட்டில் கடுமையாக உழைத்திருக்கிறீர்கள், மேலும் ஒரு அற்புதமான டெஸ்ட் வாழ்க்கையையும் பெறுவீர்கள். போங்க தம்பி” என்று பதிவிட்டுள்ளார்.

தினேஷ் கார்த்திக்கின் இந்த ட்விட்டர் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை