இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான நான்கு போட்டிகளைக் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை கான டெஸ்ட் தொடர் வருகின்ற ஒன்பதாம் தேதி முதல் நாக்பூரில் நடைபெற இருக்கிறது . சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இறுதிப் போட்டியில் பங்கேற்க இந்திய அணிக்கு இந்தத் தொடரை வென்றே ஆக வேண்டிய கட்டாயம் இருக்கிறது ஆஸ்திரேலியா அணி கிட்டத்தட்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிகளுக்கு தகுதி பெற்றுவிட்டது என்றே சொல்லலாம் .

Advertisement

ஆனாலும் கடந்த மூன்று டெஸ்ட் தொடர்களில் ஆஸ்திரேலியா அணி இந்திய அணியிடம் தொடர் தோல்விகளை சந்தித்து இருக்கிறது . இதனால் கட்டாயம் இந்த தொடரை வென்றே ஆக வேண்டிய முனைப்பில் இருக்கிறது ஆஸ்திரேலியா . மேலும் அந்த அணி இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தானில் சென்று டெஸ்ட் தொடர்களை வெற்றி பெற்ற உத்வேகத்துடன் இந்தியாவிற்கு வந்திருக்கிறது .

Advertisement

இரண்டு அணிகளுமே தொடரின் வெற்றிக்காக போராடும் என்பதால் இந்தத் தொடர் சுவாரசியமான ஒன்றாக இருக்கும் என கிரிக்கெட் ரசிகர்களும் விமர்சகர்களும் தங்களது கணிப்புகளை கூறி வருகின்றனர் . டெஸ்ட் போட்டி துவங்குவதற்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில் இரண்டு அணி வீரர்களும் தீவிரமான பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர் .

இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்த டெஸ்ட் தொடர்களில் இந்திய அணியின் முக்கியமான மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வீரராக ஸ்ரேயாஸ் ஐயர் இருப்பார் என தனது கருத்தை தெரிவித்திருக்கிறார் . மேலும் இந்திய அணிக்காக ரிஷப் பந்த் ஆடாத நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் தான் ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடிய வீரராக இருப்பார் என்று அவர் கூறியிருக்கிறார் .

இது பற்றி பேசிய அஸ்வின், “எல்லோரும் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா போன்ற வீரர்களை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள் . ஆனால் என்னை பொருத்தவரை ஸ்ரேயாஸ் ஐயர் தான் இந்தத் தொடரில் இந்தியாவின் துருப்பு சீட்டாக இருக்கப் போகிறார். கடந்த இரண்டு வருடங்களாக இந்திய டெஸ்ட் அணியில் அவர் சிறப்பான ஆட்டத்தை நடு வரிசையில் வெளிப்படுத்தி இருக்கிறார் . ரிஷப் பந்த் இல்லாத இந்த நேரத்தில் இவருடைய ஆட்டம் தான் இந்திய அணிக்கு பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய ஒன்றாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.

ஸ்ரேயாஸ் ஐயர் முதுகு வலி காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . தேசிய கிரிக்கெட் அகாடமியில் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வரும் அவர் இரண்டாவது போட்டிக்கான அணியில் நிச்சயமாக இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News