ஐபிஎல் 2022: டெல்லி கேப்பிட்டல்ஸில் இருந்து விலகும் ஸ்ரேயாஸ் ஐயர்?

Updated: Fri, Oct 29 2021 21:01 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4ஆவது முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது. அதனை தொடர்ந்து அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரானது மீண்டும் இந்தியாவில் நடைபெறும் என்றும் அதில் ஏற்கனவே உள்ள எட்டு அணிகளுடன் மேலும் இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டு 10 அணிகளுடன் இந்த தொடர் நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த புதிய 2 அணிகளுக்கான ஏலம் அண்மையில் துபாயில் நடைபெற்று முடிந்தது. இதில் லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய அணிகள் ஐபிஎல் தொடரில் இணைந்துள்ளன. அதுமட்டுமின்றி வீரர்களுக்கான ஏலமும் வருகின்ற டிசம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணியில் கேப்டன் பதவி கிடைக்கவில்லை என்றால் ஸ்ரேயாஸ் ஐயர் அந்த அணியில் இருந்து வெளியேறுவார் என்று கூறப்படுகிறது.

நடைபெற்று முடிந்த 14ஆவது ஐபிஎல் தொடரில் காயம் காரணமாக முதல் பாதியில் இடம்பெறாத ஸ்ரேயாஸ் ஐயர் இரண்டாவது பாதியில் அணியில் பேட்ஸ்மேனாக தொடர்ந்தார். முதல் பாதியில் கேப்டனாக நியமிக்கப்பட்ட பந்த் இரண்டாவது பாதியிலும் கேப்டனாக செயல்பட்டார்.

இதுகுறித்து பேசிய ஸ்ரேயாஸ் ஐயர், “கேப்டன் பதவி குறித்து யோசிக்க வேண்டியது அணி நிர்வாகம் தான். அவர்கள் என்ன முடிவு எடுத்தாலும் நான் அதை ஏற்றுக் கொள்வேன் என்று கூறினார்.

இந்நிலையில் அடுத்த சீசனில் தனக்கு கேப்டன் பதவி வழங்க வில்லை என்றால் அணியில் இருந்து வெளியேற போவதாக முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. மேலும் டெல்லி அணியின் கேப்டன் பொறுப்பினை அவர் எதிர் பார்க்கிறார் என்று தெரிகிறது. அப்படி வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் டெல்லி அணியில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Also Read: டி20 உலகக் கோப்பை 2021

கடந்த 2015ஆம் ஆண்டு முதல் டெல்லி அணிக்காக சுமார் 7 ஆண்டுகாலம் விளையாடி வரும் ஸ்ரேயாஸ் ஐயர் 2018 ஆம் ஆண்டு பாதியில் கம்பீர் கேப்டன் பதவியில் இருந்து விலகியதைத் தொடர்ந்து டெல்லி அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்தார். அவரது தலைமையில் டெல்லி அணி ஒரு முறை இறுதிப்போட்டிக்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை